முதல் பனிஷ்மென்ட் ஜெய்க்கு! சிக்கப் போகும் மற்றவர்கள்?
குடி, உன் குடியை கெடுத்தா பரவாயில்ல. சும்மா நடந்து போறவன் குடியையும் கெடுக்குதேடா… என்று அடிவயிறு எரிய ஆத்திரப்பட விடுகிறார்கள் காஸ்ட்லி குடிகார்கள். இவர்கள் தினந்தோறும் ஒரு ஆக்சிடென்ட் செய்து, யாராவது ஒருவரின் குடும்பத்தை நட்டாற்றில் விடுகிறார்கள். நல்லவேளையாக ஜெய் மோதியது பாலத்தில். அதுவே ஒரு நபராக இருந்திருந்தால்?
நள்ளிரவில் குடித்துவிட்டு கார் ஓட்டிய நடிகர் ஜெய், அடையாறு பாலத்தில் மோதி காரை விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார். அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீஸ், ஜெய் தரத் தயாராக இருந்த லஞ்சத்தையும் மீறி அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்திருக்கிறது. (பாராட்டுகள்) அவரது சைலென்சையும் ரத்து செய்ய பரிந்துரைத்திருக்கிறது.
ஜெய்யுடன் காரில் பயணித்த இன்னொரு பிரகஸ்பதி, நடிகர் பிரேம்ஜி. குடிப்பதை ஏதோ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதைப் போல பெருமை பொங்க பேசுகிறவர்கள்தான் பிரேம்ஜியும் அவரது அண்ணன் வெங்கட்பிரபுவும். இந்த கெட்ட சேர்க்கை ஜெய்க்கு அசிங்கத்தை சேர்த்துக் கொடுத்ததில் வியப்பேயில்லை.
இன்று ஜெய் சிக்கிக் கொண்டார். போலீஸ், பொறி வைத்து பிடித்தால் கோடம்பாக்கத்தில் பிரவுன்சுகர் அடிக்கிற ஹீரோக்களையும், ஏன்… சில ஹீரோயின்களையும் கூட வளைத்து விடலாம்! மூன்றெழுத்து ஹீரோ, நாலெழுத்து ஒல்லி இசையமைப்பாளர், நாலெழுத்து ஹீரோயின் என்று நிறைய பேர் சிக்குவார்கள்.
பின்குறிப்பு- இவ்வளவு செலவு செய்து சரக்கடிக்கிற இந்த கெட்டவர்கள், ஒரு பத்தாயிரம் செலவு செய்து ஒரு டிரைவரை பணிக்கு வைத்துக் கொள்வதில் ஏன் தயக்கம் காட்டுகிறார்களோ? அது அவர்களுக்கே வெளிச்சம்.
https://youtu.be/5ecB_jLT7mo