விஷாலே விலகுங்க! டைரக்டர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்!

கொஞ்சம் பாராட்டு… நிறைய திட்டு என்று விஷால் தன் அடுத்த பரபரப்பை ஆரம்பித்துவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நொடியே தயாரிப்பாளர் சங்கம் பேரதிர்ச்சிக்கு ஆளாகியது. ஏனென்றால், எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ… அந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தால்தான் தொழில் செய்ய முடியும். இந்த எதார்த்தத்தை இதற்கு முன் வந்த தலைவர்கள் யாரும் மீறியதில்லை. திமுக விலும் பிரமுகராக இருந்த ராம.நாராயணன், எப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததோ, அப்பவே தன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் வந்தார்.

அதுதான் யதார்த்தமும் கூட. ஆனால் ஆளுங்கட்சியிடமிருந்து சலுகைகளை பெற்றால் ஒழிய தொழிலை நடத்தவே முடியாது என்கிற நிலையிலிருக்கும் தமிழ் திரையுலகத்தின் உயரிய அமைப்பான தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், இப்படியொரு முடிவெடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை தராமல் வேறென்ன செய்யும்?

தயாரிப்பாளரும் இயக்குனருமான சேரன், இன்று அதிரடியாக ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். விஷால் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த தேர்தலில் வேண்டுமானாலும் நிற்கட்டும் என்பதுதான் அது.

நடிகர் சங்க பதவியை நாம் வலியுறுத்தவில்லை ஏனெனில் அதனால் எந்த நஷ்டமும் நடிகர்களுக்கு இல்லை.. ஆனால் அரசை எதிர்கொண்டு அரசின் ஆதரவை என்றும் நாடி நிற்கும் தொழில் தயாரிப்பாளர் தொழில்.. அதன் தலைவராக இருக்கும் விஷால் இப்போது அரசியலில் குதிப்பதால் முழுகப்போவது நாம்தான்.. அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் பதவிக்கு கூட நிற்கட்டும். யாரும் எதிர்க்கப்போவது இல்லை.. என்று கூறியிருக்கிறார் சேரன்.

இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் தயாரிப்பாளர் சங்கத்திற்குள் நுழைந்து தனது உள்ளிருப்பு போராட்டத்தை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
இனி நடிக்கப் போவதில்லை! சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

‘அட... உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில்...

Close