விஜய் படத்துடன் புரூஸ்லீ வரல…! ஆனா விஜய்யை விட மாட்டார் ஜி.வி.பிரகாஷ்
“தலைவா… உங்க பைரவா படத்தோட நான் நடிச்ச புரூஸ்லீயும் வருது. அதுக்கு நீங்க அனுமதி தரணும்” என்றெல்லாம் விஜய்யிடம் நேரில் கேட்டுக் கொண்டார் ஜி.வி.பிரகாஷ். “அதுக்கென்ன தம்பி. தாராளமா வா…” என்றார் விஜய்யும். “மலைய உடைக்கறதும், மல்லாக்கொட்டை உடைக்கறதும் ஒண்ணா ராசா?. பைரவா படம் வரும்போது உங்க படம் வந்தா என்ன, வராட்டி என்ன?” என்று ஜி.வி.பிரகாஷை ட்விட்டரில் ஓட்டினார்கள் ரசிகர்கள்.
அவ்வளவு களேபரத்திலும் கடைசி நேரத்தில் கல்லை போட்டுவிட்டது புரூஸ்லீ ரிலீஸ் தேதி. பொங்கலுக்கு இப்படம் வரப்போவதில்லையாம். ஏன்? பைரவா படத்திற்கே எல்லா தியேட்டரையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். அப்புறம் வர்ற மிச்ச மீதி படங்களை எங்கே போய் திரையிடுவது? அதனால் நாம நிதானமா வரலாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். இருந்தாலும், விஜய்யை பிடித்த ஜி.வி.பிரகாஷ் என்கிற ரசிகன், அவரை விட்டுப் போவதாக இல்லை. இல்லவே இல்லை.
இவரது நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்காதே’ என்ற படத்தின் ட்ரெய்லரை ‘பைரவா’ படத்துடன் இணைத்துவிட்டார்களாம். பைரவாவுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு முதலில் புலப்படப் போவது, ஜி.வி.பிரகாஷின் ஜிகில் பிகில் முகம்தான்.
ரசிங்க மக்களே… நல்லா ரசிங்க!
https://youtu.be/0y146ynNhrs