தலைவா… மன்னிச்சிருங்க! விஜய்யிடம் ஜி.வி.பிரகாஷ் சரண்டர்!
இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல… கமர்ஷியல் பட விரும்பிகள் அத்தனை பேருக்கும் டபுள் பண்டிகை! பொங்கலுக்கு சுமார் ஒரு டஜன் படங்கள் வரிசை கட்டின. அதற்கப்புறம் ரிலீஸ் பட எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டப்பட்டு ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடுகிற நிலைமைக்கு வந்தாச்சு. “விஜய்யோட பைரவாவை பாருங்க. டிக்கெட் கிடைக்காதவங்க மட்டும் நம்ம படம் ஓடுற தியேட்டருக்கு வந்து எட்டிப்பாருங்க. அதுவே தியேட்டர் நிறைஞ்சுரும்” என்றார் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் இயக்குனர். போட்டிகளில் எப்பவுமே முதல் மரியாதை விஜய் படத்திற்குதான்.
இந்த ரேசில்தான் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லி’ படமும் திரைக்கு வருகிறது. “என்னது… விஜய் அண்ணாவோட நான் மோதுறதா? கொஞ்சம் யோசிங்க சார்” என்றாராம் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். “பண்டிகை நேரம். மொத்தமா ஒரு வாரம் லீவு கிடைக்கும். அதை ஒரு ஓரமாக நாமும் பயன்படுத்திப்போம்” என்றாராம் தயாரிப்பாளர். வேறு வழியில்லாத ஜிவி.பிரகாஷ், “கொஞ்சம் நேரம் பொறுங்க” என்று கூறிவிட்டு எடுத்தார் ஓட்டம். போய் நின்ற இடம், விஜய்யின் வீடு.
“தலைவா… என்னை மன்னிச்சுருங்க. நீங்க அனுமதிச்சா என் படத்தையும் பொங்கலுக்கு கொண்டு வர்றேன்” என்று கூற, “தாராளமா வா. சந்தோஷமா வா. தயக்கமே தேவையில்ல” என்றாராம் விஜய். அதற்கப்புறம்தான் தயாரிப்பாளருக்கு போன் அடித்து “அப்படியே செய்ங்க” என்றாராம் ஜி.வி.பிரகாஷ்.
இது ஒருபுறமிருக்க, பொங்கல் தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பே… அதாவது 11 ந் தேதியே திரைக்கு வருகிறாராம் பைரவா! வாங்கண்ணா… வணக்கங்கண்ணா!