ரகுவரன் இடத்தை பிடிக்கணும்! ஹரிஷ் உத்தமன் லட்சியம்!

‘தா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் என்ட்ரியான ஹரிஷ் உத்தமன், இப்போது ‘போ’ என்று சொல்ல முடியாதளவுக்கு முக்கியமான நடிகர் ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்திலும், சிவப்பு கம்பள விரிப்புதான் ஹரீஷ் உத்தமனுக்கு!

பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயமுத்தூர். பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவரைதான் சினிமா ஆசைக்காட்டி திசை திருப்பி விட்டுவிட்டார்கள். பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்… என்று ஒரு நாளும் நினைக்க விடாதபடி முன்னேற்றம் முன்னேற்றம்…! அந்த முன்னேற்றம் எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது தெரியுமா? டோரா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி நம்ம ஹரிஷ் உத்தமன்தான்! (ஹய்)

“அதற்காக நானும் அவங்களும் டூயட் பாடுவோம்னெல்லாம் நினைச்சு பயந்துராதீங்க. நானும் அவங்களும் படத்தில ஜோடி. அவ்ளோதான்” என்கிறார் ஹரிஷ். பைரவா, தொடரி, றெக்க, மாவீரன் கிட்டு என்று முன்னணி படங்களில் எல்லாம், படு ஸ்டிராங்கான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிச்சுகிட்டே போயிடலாம்னு நினைப்பா? அல்லது ஹீராவாகணும்னு ஏதும் லட்சியமா? என்றால், மனுஷன் படீரென்று ஒரு பதிலை சொல்லி அசரடிக்கிறார்.

எனக்குத் தெரியும்ங்க. நான் என்னவா நடிச்சா சரியா இருக்கும்னு? முதல் படத்திலேயே என்னை ஹீரோன்னு சொன்னப்ப, நான் வேணாம்னு மறுத்தவன். மனசுல ஒட்டிக்கிற மாதிரி எந்த கேரக்டரா இருந்தாலும் நடிச்சுருவேன். ஹீரோ ஆசையெல்லாம் இல்லவே இல்ல. என்னோட குருநாதர் ரகுவரன் சார். அவர் இடத்தை பிடிக்கணும்னுதான் லட்சியம். சொல்லிவிட்டு தோள் குலுக்குகிறார் ஹரிஷ் உத்தமன். அட… நம்ம ரகுவரன் மாதிரியே இருக்குப்பா…!

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
prakashraj shocks the director.

https://www.youtube.com/watch?v=F_m9NUmoV1A&feature=youtu.be  

Close