அந்த லவ் கேரக்டர் சும்மா இஷ்டத்துக்கு அடிச்சு விட்டதுதானாம்! -என்னாவொரு தொழில் பக்தி?
தவற விட்ட சந்தோஷத்தையெல்லாம் கதற கதறக் கைப்பற்றி விட்டது ஆரா சினிமாஸ்! ‘இரு முகன்’ படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் இந்த நிறுவனம்தான். இதற்கு முன் ஆறேழு படங்களை வாங்கி வெளியிட்டிருந்தாலும் அத்தனையிலும் நஷ்டம். ‘இருமுகன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீனுக்கு இவர் நன்றி சொல்ல, படத்தை வாங்குறேன்னு முதல்ல சொன்ன உங்களுக்குதான் நன்றி சொல்லணும் என்று ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷுக்கு அவர் திருப்பி நன்றி சொல்ல, ஒரே ஜிங் ஜக்! (அட.. சந்தோஷத்துல இதெல்லாம் சகஜமப்பா…) அதுமட்டுமல்ல, படத்தின் கலெக்ஷனை துல்லியமாக சொல்லிக் கொண்டிருந்தார் மகேஷ். “இப்படி யாருமே ஓப்பனா சொல்ல மாட்டாங்க. நீங்கதான் சொன்னீங்க” என்று அதற்கும் ஒரு பாராட்டை தட்டிவிட்டது அரங்கம்.
“முதல்ல இந்த கதையில் ‘லவ்’ங்கிற கேரக்டரே இல்ல. ஷிபு தமின்ஸ் என்னிடம் இந்த படத்தில் விக்ரம் நடிக்கிறார். போய் அவர்ட்ட கதை சொல்லுங்கன்னு சொன்னார். கதை சொல்லப் போன இடத்தில் நான் பாட்டுக்கு இஷ்டத்துக்கு அடிச்சுவிட்டேன். அதில் உள்ள வந்ததுதான் அந்த லவ் கேரக்டர். அது விக்ரமுக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. எப்படியோ… இந்த படத்தின் சக்சஸ்க்கு அந்த லவ் விக்ரம் ரொம்ப முக்கியமாக இருந்தார் என்றார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.
ஒரு ஆச்சர்யம்… நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் குறிப்பிட்ட ஒருவர் ஆர்ட் டைரக்டர் சுரேஷ் செல்வராஜைதான். இந்த படத்தில் வழக்கமான செட் இருக்காது. வேற ஒண்ணு புதுசா செய்யணும். அதுதான் லவ்வோட லேப்னு சொன்னேன். உடனே இந்த படத்தில் வொர்க் பண்ண சம்மதிச்சுட்டார் சுரேஷ். அதே மாதிரி கையில் கிடைச்ச பாத்ரூம் கிச்சன் ஐட்டங்களை மட்டுமே வச்ச பிரமாதமா அந்த லேப்பை அமைச்சுக் கொடுத்தார். படத்தில் நீங்க நிஜம்னு நினைக்கிற பல விஷயங்கள் செட்தான் என்றார் ஆனந்த் சங்கர்.
பல படங்களுக்கு பிறகு விக்ரமுக்கு ஒரு ஹிட். மனுஷன் என்ன ஆட்டம் ஆடப் போறாரோ?
To listen the audio click below:-
இப்ப ஹிட்டுன்னு சொல்லுஙவீங்க, ஒரு நாலு நாள் கழித்து, “இருமுகன் தோல்விப்படத்தை அடுத்து விக்ரமின் புதிய படத்தை” ன்னு நியூஸ் போடுவீங்க. இந்த நாய்பொலப்புக்கு வேற வேலை பாக்கலாம்