அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்!

தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின்களையும் ‘வேணும்’ அல்லது ‘வேணாம்’ என்று சொல்கிற உரிமையும் வழக்கமும் அஜீத்திற்கு உண்டு. அவரா? வேணாம்… இவரா? பார்க்கலாம்… ஓ அந்த நடிகையா? எதுக்கு வம்பு… என்று பல்வேறு ரீயாக்ஷன்கள் கொடுக்கும் அஜீத், கடைசியாக ஒருவரை டிக் அடிப்பார். அப்படி அஜீத்தால் டிக் அடிக்கப்பட்டவரா காஜல் என்றால், இல்லை… இல்லை… இல்லவே இல்லை என்கிறது கோடம்பாக்கம்! பின்(னாக குத்துகிற) குறிப்பு என்ன தெரியுமா? தல57 ல் காஜல்தான் அஜீத்திற்கு ஜோடி.

அப்புறம் எப்படி நடந்தது அந்த அதிசயம். பேய்க்கு வாக்கப்படுறதை விட பிசாசுக்கு யெஸ் சொல்லிடலாமே என்று தயாரிப்பு தரப்பு நினைத்ததால் வந்த விளைவுதானாம் அது.

இந்த படத்திற்கு யாரை ஹீரோயினாக்கலாம் என்று ஆளாளுக்கு டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கும்போதே அஜீத்திற்கு போன் அடித்துவிட்டாராம் அந்த நடிகை! சுய லைஃபில் விவகாரமான நடிகைதான் அவர். இவரும் “சரி… நான் தயாரிப்பாளர்ட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டாராம். அதற்குள் விஷயம் தயாரிப்பு தரப்புக்கு போய்விட்டது. அந்த நடிகை ஷுட்டிங்குக்கு வந்தால், அவரை தாங்கவே தனியாக ஒரு தொண்டர் கூட்டத்தை போடணும். இன்னும் இன்னும் சில அசவுகர்யங்களும் இருக்கு. எதுக்கு வம்பு? பேசாம காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் கொடுத்துடலாம். அஜீத் கேட்டால், அட்வான்ஸ் கொடுத்தாச்சே என்று சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தார்களாம்.

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாமலே காஜலின் அக்கவுண்டுக்கு பணம் போய்விட்டதாம். சென்னையிலிருக்கும் மேனேஜர் மூலமாக மிச்சத்தையும் பேசி தேதியை வாங்கிவிட்டார்கள். அதற்கப்புறம்தான் இந்த விஷயம் ஒரு தகவலாக சொல்லப்பட்டதாம் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும்.

படப்பிடிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இதை ஒரு பெரிய விஷயமாக்குவானேன் என்று தன் ஈகோவை இழுத்து சுருட்டிக் கொண்டாராம் அஜீத்.

ஒரு படம் உருவாவதை விட, அந்த படத்தின் உருவாக்கத்திற்கு பின்னாலிருக்கும் அபாய சங்கின் ஒலியை மட்டும் கேட்டால் போதும்… காது ஜிவ்வென்று சப்தம் கேட்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Chennai 600028 II Innings Official Teaser

Close