கடவுளே… இந்த விஷயம் உண்மையா? ரொம்ப தப்பாயிருக்கே?

சொசைட்டியில் பெரிய அந்தஸ்தில் இருக்கிற பலரும், சில விஷயங்களில் ஸ்லிப் ஆகி தனது இமேஜை கெடுத்துக் கொள்வதுடன் மீண்டும் அந்த இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்குள் களைப்பாகி இளைப்பாகி விடுகிற நிலைமை தமிழ்நாட்டுக்கு புதுசு அல்ல. முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பற்றி ஒரு சம்பவம் சொல்வார்கள். அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அரசு வீட்டில் தங்கியிருந்தாரல்லவா? அப்போது தனக்கு ஒரு டைப் ரைட்டர் மிஷின் வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதி பெற்றுக் கொண்டாராம். இத்தனைக்கும் அதன் அப்போதைய மதிப்பு சில ஆயிரங்களுக்குள்தான்.

கிட்டதட்ட அப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகரும் எல்லாவற்றுக்கும் மேல் விஜய்யின் அப்பா என்கிற அந்தஸ்திலிருக்கும் எஸ்.ஏ.சி.

சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதல்லவா? அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் பெட் ரெஸ்ட்டிலும் இருந்தார். இவருக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ஹெல்த் இன்ஷுயூரஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி சுமார் நாலு லட்ச ரூபாய் மருத்துவ செலவாக பெற்றுக் கொண்டாராம்.

இந்த நாலு லட்சம் அவரை பொருத்தவரை ஒரு பணமே அல்ல. ஆனால் அவர் இன்ஷியூரன்ஸ் க்ளைம் பண்ணியதை சற்று வியப்போடும், அதிர்ச்சியோடும் பகிர்ந்து கொள்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த பிரமுகர்கள் சிலர். எலக்ஷன் வருகிற இந்த நேரத்தில் எதிரணியினர் கிளப்பிவிடும் பொய் பிரச்சாரமாக கூட இது இருக்கலாம்.

தகவல் வதந்தியாக இருந்தால் அதைவிட சந்தோஷம் வேறெது?

https://youtu.be/Bz4RGCzn82M

2 Comments
  1. Rajii says

    Poi pirasaram. Ellaam antha dhanu velaiya than irukkum.

  2. SMS says

    Nothing wrong in that. Insurance company will pay. Not the association. That is the reason why anyone has health insurance. SAC did right.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“Nagesh Thiraiyarangam” Teaser Link

https://www.youtube.com/watch?v=dAnLlDhYdgk&feature=youtu.be

Close