உங்களுக்கு இருக்கிற மார்க்கெட் மருவாதிக்கு இதெல்லாம் தேவையா விக்ரம்பிரபு?

‘வீர சிவாஜி’ என்ற புத்தம் புதிய படத்தை ஜெயா தொலைக்காட்சியில் வெளியிடப் போகிறார்கள். நாள்… ஏப்ரல் 14 ந் தேதியான தமிழ் புத்தாண்டு. (இதென்னடா ரத்தங்களுக்கு வந்த சோதனை?) நல்ல நேரத்திலேயே இந்த டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் புதைகுழிக்குள் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் வீர சிவாஜி மாதிரியான படத்தை ஒளிபரப்புவதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது?

இருந்தாலும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடித்த படமாச்சே? அதுமட்டுமல்ல… ஜெயா தொலைக்காட்சியின் தற்போதைய முதலாளி தினகரன் அண் கோவின் சொந்தமல்லவா விக்ரம் பிரபு? அதன் காரணமாகவும் இந்தப்படத்தை போட்டுத் தொலைவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பொரி உருண்டைக்கே ஆகாத ஆளுக்கு கறி உருண்டை கிடைச்சா சந்தோஷப்பட வேண்டியதுதானே? அங்குதான் தன் முறுக்கை காட்டியிருக்கிறார் விக்ரம் பிரபு. சினிமாவை ஒளிபரப்புவதற்கு முன், இவரது பேட்டியை வெளியிட்டுவிட்டு படத்தை போட்டா இன்னும் பில்டப்பா இருக்குமே என்று நினைத்ததாம் நிர்வாகம். விக்ரம் பிரபுவை ஸ்டூடியோவுக்கு அழைத்திருக்கிறார்கள். ஒரு வாரம் அவர்களுக்கு போக்கு காட்டி வந்த விக்ரம் பிரபு, திடீரென ஒரு பதிலை சொன்னாராம். ‘எனக்கு அந்த புரட்யூசர் சம்பள பாக்கி வச்சுருக்கார். நான் ஏன் பேட்டிக்கு வரணும்?’

தயாரிப்பாளர் பாக்கி வச்சா அவர்ட்டதானே கேட்கணும்? அதுக்கு ஜெயா டி.வி என்ன செய்யும்?

மாங்கொட்டையில ஜுஸ் பிழிஞ்சு மார்க்கெட்ல வித்தா மாதிரிதான்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுதான் ரஜினியின் உண்மையான முகம்!

https://www.youtube.com/watch?v=pEKpX0Qt_lc

Close