எஸ்.வி.சேகரை சும்மாவிடக் கூடாது! பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு!

பரமசிவன் கழுத்தில், கயிறு இருந்தாலே படம் எடுக்கும். ஒரிஜனல் பாம்பே இருந்தால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது தமிழ்நாடு. தன் விஷப் பல்லை நேரங் கெட்ட நேரத்திலெல்லாம் வெளியே நீட்டி அச்சுறுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் பி.ஜே.பி யின் காவி பயில்வான்கள்.

எப்படியாவது காவேரி குறித்த தமிழர்களின் கோஷத்தையும் கொந்தளிப்பையும் திசை திருப்பிவிட வேண்டும் என்பதற்காகவே பேசுகிற எச்.ராஜா வரிசையில் நேற்று தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் நடிகர் எஸ்.வி.சேகர்.

தமிழகத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரச்சனை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். தினந்தோறும் சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கும் திருவாளர் பொதுஜனத்திற்கு, பிட்டு படம் காட்டியாவது திசை திருப்பி விட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். பேராசிரியர் நிர்மலாதேவி மூலமாக அது நல்லபடியாக நடந்து விட்டது. எல்லாரும் காவேரியை விட்டுவிட்டு, கவர்னரை பிடித்துக் கொண்டார்கள். அந்த முடிச்சு பலமாக இறுகி, கண்விழி பிதுங்கிவிட்டது கவர்னருக்கு. அவரை காப்பாற்ற வேண்டுமே? இப்போது கவர்னரை விட்டு எவரை பிடிப்பது என்பதுதான் தமிழக பிஜேபியின் முதல் அஜன்டாவாக இருக்கிறது. அதன் விளைவாக,

‘என்னைப் புடிச்சுக்கோ’ என்று தண்டவாளத்தில் தலையை கொடுத்திருக்கிறார் எஸ்.வி.சேகர். வீட்டுக்காரி ரசிக்கணும் என்பதற்காக பக்கத்துவீட்டுக்காரியின் தொண்டையை கசக்கிய கதையாக, சும்மாயிருந்த பத்திரிகையாளர்களை கொச்சை படுத்தியிருக்கிறார் அவர். அதுவும் மிக மிக கீழ்த்தரமாக.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு இதோ-

இவ்வளவு கீழ்த்தரமாக பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த பின் சும்மாயிருக்குமா மீடியா. இன்று முக்கியமான பத்திரிகை சங்கங்கள் கூடி, சென்னையிலிருக்கும் பி.ஜே.பி அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல… எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‘எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால், விசாரித்து கைது செய்யப்படுவார்’ என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து பத்திரிகையாளர்கள் பலரும் அவர் மீது புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

அவர் நினைச்ச மாதிரியே, கவர்னர் விஷயம் கப்சிப்!

எஸ்.வி.சேகரை காப்பாற்ற இனி எவன் தலையையாவது உருட்டணுமே, அது எப்போ எச்.ராசா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அம்பலமான ஆர்யாவின் நாடகம்!

https://www.youtube.com/watch?v=4p79yJqFSIo&t=4s

Close