500 தியேட்டர்! நமட்டு சிரிப்பு சிரிக்கும் அருண்விஜய்!

‘நின்னுகிட்டே தேங்கா பறிக்கணும்’ என்று பேராசைப்படும் ஹீரோக்கள் கோடம்பாக்கத்தில் கொஞ்சம் பேர் இல்லை. நிறைய இருக்கிறார்கள். இவர்களில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக முன்னேறியவர் அருண் விஜய் என்றால், ஆமாங்க ஆமாம் என்று கூறும் இன்டஸ்ட்ரி.

ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக நடுவில் வில்லனாக கூட நடித்தார். அஜீத்தின் என்னை அறிந்தால், அருண் விஜய்யின் துணிச்சலான முடிவுக்கு ஒரு நல்ல பரிசை தந்தது. இப்போது அஜீத் ரசிகர்களும் அருண் விஜய்க்கு தோள் கொடுக்க கிளம்பியிருக்கிறார்கள். ‘‘வில்லனா நடிச்சுட்டாரா… இனிமே எவன் ஹீரோவா நடிக்கக் கூப்பிடுவான்?” என்று இவர் காதுபடவே கிண்டல் அடித்த பலருக்கும் இந்த செய்தி வியப்பாக இருக்கும்.

யெஸ்… அருண் விஜய் நடித்து நாளை வெளிவரவிருக்கும் ‘குற்றம் 23’ சுமார் 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. மார்க்கெட்டில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் ஹீரோக்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த விஷயம், இப்போது நடந்திருப்பதற்கு காரணம் விநியோகஸ்தர்கள் மட்டும் இல்லை. தானாகவே முன் வந்து குற்றம் 23 ஐ திரையிடுவதற்கு ஆர்வம் காட்டிய தியேட்டர்களும்தான் என்று சந்தோஷப்படுகிறது K23 டீம்!

ஒரு முக்கிய தகவல்- தைரியமாக முழு படத்தையும் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார் அருண் விஜய்.

https://youtu.be/CdbVKTPVsy4

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெடுவாசலை நான் காப்பாற்றுவேன்! விஷால் ஆவேசம்

https://www.youtube.com/watch?v=-5UJqBCNkJo

Close