உப்பு போட்ட தமிழனும் உள்ளே நுழைந்த தெலுங்கனும்! காலா களேபரம்!
‘ஆஹா… இதல்லவோ உணர்வு’ என்று ஆன்ட்டி ரஜினிகள் சந்தோஷப்பட்ட தருணம், காலாவுக்கு நார்வே மற்றும் சுற்றுபுற நாடுகளில் போடப்பட்ட ரெட் தருணம்தான்.
தூத்துக்குடி போராட்டத்தை கொச்சை படுத்திய ரஜினியை கண்டிக்கும் விதத்தில் “காலாவை நாங்கள் வெளியிடப் போவதில்லை” என்று அறிவித்தார் வசீகரன் சிவலிங்கம். இவர் நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முக்கிய தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர். அதுமட்டுமல்ல… தொடர்ந்து தமிழில் வரும் நல்ல படங்களை ஊக்குவித்து நார்வே தமிழ் விருதுகள் வழங்கி வரும் புலம் பெயர்ந்த தமிழரும் கூட.
இவரது முடிவால் சற்று ஆடித்தான் போனார்கள் ரஜினி ரசிகர்கள். இருந்தாலும் உலக தமிழனின் இரக்கம், உள்ளூர் தமிழனின் கொதிப்புக்கு கொஞ்சமேனும் மருந்தாக இருந்தது. எல்லாம் காலா மறுப்பு அறிவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திற்குதான். அதற்கப்புறம் சென்னையிலிருந்து நீண்….ட வியாபார கரங்கள் ஒரு தெலுங்கரிடம் சரண் அடைந்தது. “காலாவை நீங்கதான் நார்வே மற்றும் அந்த நாடு சார்ந்த மற்ற பகுதிகளில் வெளியிடணும்” என்றார்களாம்.
மளமளவென காரியத்தில் இறங்கிய அந்த தெலுங்கர், படத்தை ரிலீஸ் செய்கிற வேலைகளில் இருக்கிறார். முன் பதிவும் தொடங்கியாகிவிட்டது. ஆனால் முப்பது சதவீதம் கூட ஃபுல் ஆகவில்லையாம். ஏன்?
‘தமிழனாய் ஒன்றிணைவோம். காலாவை புறக்கணிப்போம்’ என்கிற கோஷம்தான் காரணம்.
கடைசி நேரத்தில பேஸ்ட் வேஸ்டாவுதேன்னு முகத்துல போட்டு தேய்ச்சுக்காதீங்க கண்ணுங்களா!