காலா வெற்றிதான்! தனுஷ் அறிவிப்பால் தவிக்கும் தியேட்டர்காரர்கள்!
“அட கூமுட்டைகளா… காலா வெற்றிதாண்டா” என்று தனுஷின் எரிச்சலை முழுங்கிக் கொண்டு அதே பொருளில் வெகு டீசன்ட்டாக வந்திருக்கும் வுண்டர்பார் ட்விட், எரிச்சலை மட்டுமா முழுங்கியது? ஏகப்பட்ட உண்மையையும்தான் என்கிறார்கள் தியேட்டர்கார்கள்.
இன்று வெறும் 35 மால் தியேட்டர்களில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் காலா, தங்களுக்கு ஏற்படுத்திய நஷ்டம் சுமார் 18 கோடி என்கிறார்கள் அவர்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர்,
“கோவை மற்றும் மதுரை ஏரியாவில் திருப்பூர் சுப்ரமணியமும் மதுரை அன்பும் தங்களது கை பணத்தை போட்டு தியேட்டர்காரர்களின் வாயை மூடிவிட்டார்கள். விரைவில் வரவிருக்கும் கோலமாவு கோகிலா, வட சென்னை ஆகிய படங்களில் காலா நஷ்டத்தை சரி செய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் தமிழகத்தின் பிற ஏரியாவில் கிணற்றில் போட்ட கல்லாக சைலன்ட்டாக இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். தினந்தோறும் அவர்களை நச்சரித்து வருகிறார்கள் தியேட்டர்காரர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் நஷ்டம்”.
“தனுஷுக்கு அடுத்தடுத்து படங்கள் இருப்பதால், அந்த நேரத்தில் சுளுக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காத்திருக்கும் அவர்கள், தங்கள் சொந்த பணத்தில்தான் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருகிறார்கள்”.
இவ்வாறு குறிப்பிடுகிறார் திருச்சி ஸ்ரீதர்.
இவ்வளவு அவரசம் அவசரமாக காலா வெற்றிப்படம்தான் என்று வுண்டர்பார் நிறுவனம் அறிவித்ததன் பின்னணி என்ன? ரஜினியின் கோபம்தான் காரணமாம். நடுவில் தனுஷை அழைத்து, “காலா விஷயத்தில் என்னதான் நடக்குது? நெகட்டிவா மீடியாக்களில் செய்தி வருவதை பார்க்கிறேன். உண்மையை சொல்லுங்க” என்று கேட்டதாகவும், அவருக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒரு உண்மை தடவிய பொய்யை தனுஷ் சொன்னதாகவும் கூறுகிறார்கள் திரையுலகத்தில்.
இந்த 18 கோடிக்கு தினந்தோறும் வட்டிக்கணக்கு எழுதி வரும் தியேட்டர்காரர்கள் கோலமாவு கோகிலா சமயத்தில் வாயை திறப்பார்கள். அல்லது வடசென்னை சமயத்தில் வாயை திறப்பார்கள். அப்போது தெரியும்… உண்மை தடவிய பொய் என்றால் என்ன என்று!
KAALA BLOCKBUSTER MOVIE IN INDIAN CINEMA
Kaala Movie Box Office Collection Day Wise (Tamil, Telugu & Hindi) WorldWide
1st Day 40.70 Crore
2nd Day 29.50+Crore
3rd Day 31.55+Crore
4th Day 31.00+Crore
5th Day 18.00+Crore
6th Day 10.00+Crore
7th Day 07.00+Crore
8th Day 04.00+Crore
9th Day 02.00+Crore
10th Day 03.00+Crore
11th Day 04.10+Crore
12th Day 02.00+Crore
13th Day 01.50+Crore
14th Day 01.45+Crore
15th Day 01.15+Crore
16th Day 01.00+Crore
17th Day 01.50+Crore ( Expt.)
18th Day 02.00+Crore
19th Day 01.00+Crore
20th Day 00.95+Crore
21th Day 00.80+Crore
22th Day 00.75+Crore
23th Day 00.70+Crore
24th Day 00.85+Crore
25th Day 00.90+Crore
26th Day 00.40+Crore
27th Day 00.25+Crore
28th Day 00.20+Crore
29th Day 00.15+Crore
30th Day 00.14+Crore
31th Day 00.16+Crore
32th Day 00.20+Crore
33th Day 00.10+Crore
34th Day 00.09+Crore
35th Day 00.09+Crore
இந்திய சினிமாவின் ஒரே உச்ச நட்சத்திரம் ஒரே வசூல் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான்.