காலா பிரமோஷன்! ஏப்ரல் 1 ல் இருந்து ரஜினி தீவிரம்
காலா படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 27 வெளிவருமா? அல்லது தள்ளிப்போகுமா? இந்த பதற்றம் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் இருக்கும். வந்தா வரட்டும்… வராட்டி போகட்டும்… மன நிலை அப்படத்தின் ஹீரோவான ரஜினிக்கு இருக்க வாய்ப்பே இல்லை. (ஆனால் தன் படம் குறித்து அப்படி விட்டேத்தியாக இருப்பவர்களும் இங்கு உண்டு)
காலா குறித்த தேதியில் வெளிவருவதாகவே நினைத்து பிரமோஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ரஜினி. எப்படி?
டிஎம்ஒய் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம்தான் காலா படத்தை மலேசியாவில் வெளியிடப் போகிறது. நம்ம படத்துக்கு பிரமோஷன் பண்ணுற மாதிரி ஒரு மராத்தான் ஓட்டம் நடத்தப் போறோம். ஏப்ரல் 1 ந் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. அதற்கு நீங்க வந்துதான் கொடி அசைத்து துவக்கி வைக்கணும் என்று ரஜினியிடம் கேட்டதாம் அந்த நிறுவனம்.
அப்புறமென்ன? வர்றேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ரஜினி. இப்பவே மராத்தானுக்கான வேலைகளை விட, ரஜினியை வரவேற்பதற்கான தடபுடல் நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.