பாட்டு வாங்குகிற கட்சிகளுக்கு நடுவில் பாட்டு ஒன்றை அரங்கேற்றிய கமல்!
பாட்டும் பேச்சுமாக திருச்சி மாநாட்டை கலக்கிவிட்டார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு, வெறும் வெற்றுக் கூச்சல் அல்ல என்பதை மறுபடியும் நிரூபித்த கமலுக்கு அவரது ரசிகர்கள் கொள்ளை பிரியத்தை கொட்டி அனுப்புவார்கள் என்பது இருக்கட்டும்.
அவர் ஏன் சினேகன் போன்றவர்களை கட்சியில் இணைத்தார் என்பதற்கான விளக்கமாகவும் இருந்தது சில படிகள். யெஸ்… அவர் எழுதிய பாடல் ஒன்றை அந்த மேடையில் ஒலிக்கச் செய்தார்கள். இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில், வரி வரியாய் செதுக்கியிருந்தார் சினேகன். லைவ் ஷோவாக இந்தப்பாடல் ஸ்டேஜில் இடம் பெற… ரசிகர்கள் மத்தியில் ஒரே கரகோஷம்.
மாநாட்டுக்கு கிளம்புகிற முதல் சில நாட்களுக்கு முன்பே, இந்தப்பாடல் அவரை கேட்க வைத்தாராம் இசையமைப்பாளர் தாஜ்நூர். பாடலை கேட்ட அடுத்த நொடியே, கிளம்பி மாநாட்டுக்கு வாங்க. அங்கே நேரடியா ஸ்டேஜ்ல இந்த பாடல் லைவ் ஆகுது என்று கூறிவிட்டாராம் கமல்.
இந்த பாடல் மட்டுமல்ல. இன்னும் சில இசையமைப்பாளர்களின் உதவியோடு தயாராகியிருக்கும் பாடல்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு ஆல்பமாக வெளியிடுகிற ஐடியாவும் இருக்கிறதாம் அவருக்கு.
பிஜேபி மாதிரி சில இயக்கங்கள் ஜனங்களின் வாயில் விழுந்து பாட்டு வாங்கிக்(?) கொண்டிருக்கிற நேரத்தில், இனிய பாடல்களோடு இயங்க ஆரம்பித்திருக்கும் கமல் காதின் வழியாக நுழைந்தும் மனதில் இடம் பிடிப்பார் போலிருக்கிறது.
ஏனென்றால் தாஜ்நூர் மேடையில் இசைக்கப்பட்ட அந்தப்பாடல் இனிப்போ இனிப்பு!