நம்நாடு முன்னேற்றக் கழகம்! தயாராகிறார் கமல்?

“அரசியல் வேணாம்னு சொல்லல. இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்” என்று கமல் பல்டியடிக்கும் நாள் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. அவர் வீட்டுத் தெருவில் நாலு பேர் ஒன்றாக நடந்தால் கூட, “ஏதோ திட்டம் இருக்கு போல…” என்று உளவுக் கண்களால் உற்றுப் பார்க்கிற சூழ்நிலைக்கு தமிழ்நாட்டை ஆளாக்கிவிட்டது சமீபகால கமலின் நடவடிக்கைகள்.

நாம உண்டு. நம்ம கெட்டப்ஸ் உண்டு என்று பல வருஷங்களாக பாராமுகமாக இருந்த கமலுக்கு ஏன் திடீர் அரசியல் கருத்துகள். அதி அவசர அங்கலாய்ப்புகள் என்றெல்லாம் யோசித்த உலகத்திற்கு, கடந்த வாரத்தில் அவர் கூட்டிய கூட்டம் ஒன்று விரைவில் சில தகவல்களை சொல்லக்கூடும்.

தமிழகம் முழுவதுமிருக்கிற வழக்கறிஞர்களில் பலரையும், கமல் நற்பணி இயக்கத்தின் முக்கிய தூண்கள் சிலரையும் தன் வீட்டுக்கு வரவழைத்திருந்தார் கமல். அதற்குள் அவர் தன் கட்சி பெயரை அறிவிக்கப் போகிறார் என்கிற அளவுக்கு சூடு ஏறியது மீடியாவுக்கு. ஆனால் அன்று மாலையே அந்த யூகத்தையெல்லாம் புஸ்வாணம் ஆக்கிவிட்டு கிளம்பிப் போனார்கள் அவரவர் ஊருக்கு.

சும்மா… சந்திப்புதான். விசேஷம் ஒண்ணுமில்ல… என்றும் அறிவித்துவிட்டார் கமல். ஆனால்?

என்னய்யா ஆனால்? அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும், அந்த கட்சிக்கு நம்நாடு முன்னேற்றக் கழகம் என்றும் பெயர் வைத்துவிட்டதாக அரசல் புரசலாக செய்திகள் அடிபடுகின்றன.

MAD என்றெல்லாம் கட்சிக்கு பெயர் வைக்கிற அளவுக்கு கத்துக்குட்டிகளாகதான் இருக்கு நாடு.

கம்னு வந்துருங்க தலைவா!

https://youtu.be/KDHiHGHdpqU

3 Comments
  1. லாரன்ஸ் says

    சும்மா வாட்சப் tweitter இதில் கருத்தை தெரிவிப்பதில் ஒரு பயனும் கிடையாது. களத்தில் இறங்கி போராடும் துணிவு வேண்டும். இனி திராவிடன் என்பதை எல்லாம் பம்மாத்து வேலை. எடுபடாது. தமிழன் என்ற இன உணர்வோடு ஒன்று படுவோம். வென்று காட்டுவோம்.

  2. சரத் says

    கூத்தாடிகள் தமிழ்நாட்டை கெடுத்த வரையில் போதும். தமிழக மக்கள் விழித்து கொண்டார்கள். இனி அரசியலுக்கு வரும் கூத்தாடிகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓட ஓடவிரட்டி அடிப்பார்கள்.

  3. அன்பழகன் says

    மக்கள் மிக மிக தெளிவாக உள்ளனர். இனி சினிமாக்காரர்களை மக்கள் ஓட ஓட விரட்ட போகிறார்கள். கமல் ஒரு சுயநலக்காரன். தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாத விரக்தியில் வெளிநாடு செல்வேன் என்று சொன்னான். இப்போது இந்த ஆட்சி சரியில்லை என்று சொல்கிறான். ஆட்சி சரியில்லை என்பதே தமிழ்நாடு மக்கள் அனைவரின் கருத்தும். நடந்து கொண்டு இருக்கும் அதிமுக மாஃபியா கும்பல் ஆட்சி தூக்கி எறியப்படும். ஆனால் கமல் சொல்வது சுயநலம். .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆன் லைன் புக்கிங் அநியாயம்! தோலுரித்த ஆர்.கே! காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்?

Close