கட்சி செலவுக்கு துட்டு இல்ல! பிக் பாஸ் 2 பில்லு ஏறிடுச்சு!

‘காயாத கானகத்தில் மேயாத மானை விரட்டிக் கொண்டிருக்கிறார்’ என்று கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து மற்றவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்க… ‘மானாவது, மயிலாவது. என் ஓட்டமே வேற’ என்று ஓடிக் கொண்டிருக்கிறார் அவர். மாநாடு, மய்யம் ஆப், கல்லூரிகளில் கலக்கல் பேச்சு என்று கமலின் இலக்கு, நாற்காலியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், “அந்தாளுக்கு துட்டு எவம்லே தர்றான்? கிறிஸ்துவ அமைப்பா இருக்குமோ? இல்ல, பிஜேபி யா இருக்குமோ? காங்கிரசா இருக்குமோ? இல்ல, கருப்புப்பணம் வச்சுருக்கிற தொழிலதிபன் எவனாச்சும் இருக்குமோ?” என்று நாக்கில் நரம்பில்லாமல் புரட்டி புரட்டி எடுக்கிறது ஊர்.

நிஜத்தில், கட்சி நடத்தவே காசில்ல ரேஞ்சில் இருக்கிறாராம் மய்யம் விஞ்ஞானி. அந்த செலவை நான் பார்த்துக்குறேன். இந்த செலவை அவர் பார்த்துப்பார் என்ற ரீதியில் நடந்து கொண்டிருந்த பயணத்தில், நடுநடுவே சொந்த காசையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கிறாராம் கமல்.

இந்த நேரத்தில், விஜய் டி.வி யின் பிக் பாஸ் பார்ட் 2 கமலின் கட்சி நரம்பில் புதிய ஹார்லிக்சை ஊட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த முறை இந்த நிகழ்ச்சிக்காக 12கோடி சம்பளம் வாங்கிய கமல், இந்த முறை தன் சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

எலக்ஷன் நேரத்தில் உருட்டி பொறட்டதான் ஏராளமான ஆளுங்க வருவாங்களே?

1 Comment
  1. Jospeh Vijay says

    கமலை நம்பி தயாரிப்பாளர்களே காசு போட தயாரா இல்லை. இந்த
    லட்சணத்துல எந்த முதலாளி இவனை நம்பி காசு போட்டு கட்சி
    ஆரம்பிப்பாங்க. எல்லா சும்மா time pass அவளோ தான் இவரு twitter ல
    மட்டும் தான் போராடுவாரு அதுவும் திமுக ஆட்சிக்கி வந்தா திரை
    உலகத்தை அபேஸ் செய்து விடுவார்கள் என்று இப்போதே துண்டு போட்டு
    வைத்து கொள்கிறார் அவ்வளவு தான் . அதனால் தான் இந்த twitter போராளி
    திமுகவை விமர்சிப்பது இல்லை

    கணினி போராளி. நீட், நெடுவாசல், கதிராமங்கலம், காவேரி மேலாண்மை வாரியம், மதுவிலக்கு போன்ற வற்றில் கமலின் நிலைப்பாடு என்ன ??? இது வரைக்கும் மக்களை சேர்ந்து கொண்டு ஏதாவது போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தியது உண்டா ? இப்பவும் தனது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த எதிர்ப்பை மடைமாற்ற தான் தமிழக அரசு லஞ்சம் ஊழல் என்று பிதற்றுகிறார். கருணாநிதி ஜெயா எல்லாம் உத்தமர்களா அல்லது அவர்களிடம் பயமா ?>> சும்மா ரசிகர்களை தூண்ட கூடாது. களத்தில் இறங்கி போராடும் திராணி கமலுக்கு இல்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலாஜியின் குடும்ப சண்டைக்குள் மூக்கை நுழைத்த சிம்புவுக்கு ஏற்பட்டகதி இது தான்

https://www.youtube.com/watch?v=2ytRA2zO2t0

Close