விஸ்வரூபம் 2 ஐ ஓட வைக்க ஒரு ஜெயலலிதா இல்லையே!

வானத்தில் நிலா வட்டமடிக்கும் போது குளிர குளிர ரசித்த அதே கண்கள், அமாவாசையன்று இருட்டுக்கு பழகிக் கொள்வதும் எதார்த்தம்தானே? அன்று ஒரு ஜெயலலிதாவால் விஸ்வரூபம் படத்தை ஓட வைத்து வெளிச்சத்தை ரசித்த கமல், இன்று கண்ணை மூடாவிட்டாலும் எல்லா திசையும் இருட்டாக இருப்பதை கண்டு என்ன முடிவெடுப்பாரோ?

யெஸ்… விஸ்வரூபம் பார்ட் 2 படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இதே விஸ்வரூபம் முதல் பகுதி வரும்போது நாடெங்கிலும் இருந்து எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், இப்போது இரும வேண்டும் என்று நினைத்தால் கூட, ஆழ்வார்ப்பேட்டைக்கு கேட்காமல் இறும நினைக்கிறார்கள். ‘யாராவது ஒரு கல்லை வீசுங்க. மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிற நிலைமையில் இருக்கிறார் கமல்.

அந்த ஒரு கல்லை வீசி புண்ணியத்தை கட்டிக் கொள்ளும் போலிருக்கிறது சென்சார். சுமார் 17 கட் கொடுத்திருக்கிறார்களாம் படத்திற்கு. அதுமட்டுமல்ல… இந்த 17 கட்டுக்கும் சம்மதித்தால் கூட, படத்திற்கு யு/ஏ தான் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்களாம். தன் படத்திற்கு எதிராக மத்திய அரசு கழுத்து நெறிப்பு வேலை செய்கிறது என்று கமல் குமுறலாம். அதன் மூலம் படத்திற்கு ஒரு அட்டென்ஷன் கிடைக்கலாம். ஆனால், ஜெயலலிதா இருந்தபோது கமல்ஹாசனை கதற விட்ட மாதிரி இப்போது யாரும் கதறவிடப் போவதில்லை.

அதையே சாக்காக வைத்துக் கொண்டு கல்லாவை நிரப்பவும் கமல்ஹாசனால் முடியப்போவதில்லை.

ஜெ-வின் வெற்றிடம் ஒரு பக்கம் லாபம் என்றாலும், இன்னொரு பக்கம் நஷ்டம் என்பதை உணர்ந்திருப்பார் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முரட்டுக்குத்து காலத்தில் நரை! சங்கிலி முருகன் ஷாக்!

Close