சசிகலாவுக்கு தண்டனை! வளர்மதி ரேஞ்சுக்கு இறங்கி அடித்த கமல்!
ஜெயலலிதா இறந்தபின்பு நெஞ்சை சிலுப்பிக் கொண்டு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். அவர் போடுகிற ஒவ்வொரு ட்விட்டும் நாட்டில் பற்றிக் கொண்டு எரிகிற அளவுக்கு படு ஹாட். சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்ததை கூட படு ஹாட்டாக விமர்சித்திருந்தார் கமல். அதற்கப்புறம் மிக தைரியமாக ஓ. பன்னீர்செல்வத்தையும் ஆதரித்தார். இப்படியெல்லாம் உடனுக்குடன் ரீயாக்ஷன் கொடுத்து வருவதை அவரது ரசிகர்கள் பெருமையாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில்தான் சசிகலாவுக்கு ஜெயில் என்று தீர்ப்பளித்து நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது உச்சநீதிமன்றம். உடனடியாக அவர் சரணடைய வேண்டும் என்று சொல்லியும் கூட எவ்வித அலட்டலும் இன்றி கூவாத்தூர் ரிசார்ட்டில் கட்சிப்பணி ஆற்றிக் கொண்டிருந்தார் சசிகலா. இவ்வளவு களேபரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தும், தனது தம்பி தினகரனை அதிமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டும் மிக மிக நிதானமாக பெங்களுர் கிளம்பியதைதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை கமலால்.
இன்று காலை அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு அநியாயத்துக்கு வளர்மதி ரேஞ்சுக்கு இறங்கி அடித்தது.
திருடனு கூவிகினு ஜனம்
தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?
இப்படி கேள்வி எழுப்பியிருந்தார் கமல். வழக்கம் போல அவர் யாரை திட்டுகிறார்? எதற்காக திட்டுகிறார்? என்ன மொழியில் திட்டுகிறார் என்பதை அறியாத பொதுசனம், அண்ணே என்னவோ சொல்ல வர்றாரு. கண்டிப்பா இந்தம்மாவாதான் சொல்றாரு போல… என்று கைதட்டி மகிழ்ந்தது. அடுத்த ட்விட் என்னா தலைவரே?
https://www.youtube.com/watch?v=4CkaXaTV4v0&t=1s