போலீஸ் தடியடி! இளைஞர்களுக்காக முதல்வரிடம் பேசிய கமல்!
இளைஞர்களின் இந்த மெரீனா புரட்சியை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. கமல் மட்டும் விதிவிலக்கா என்ன? இன்று அதிகாலையில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத செயல்களால் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு உள்ளம் பொங்காத மனிதர்களே இல்லை. உடடினயாக கமல் செய்ததுதான் ஆச்சர்யம். தனது ட்விட்டர் மூலம் இளைஞர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கப்புறம் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடமும் பேசியிருக்கிறார். அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமலிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் ட்விட் இதுதான்.
இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.
அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?
மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன். அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.
அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்.
வெளியே நின்று வேடிக்கை பார்க்காமல் தன் செல்வாக்கை பயன்படுத்தி சில கேள்விகள் கேட்ட கமலுக்கு இளைஞர் உலகம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
https://youtu.be/Nb1xcEgrNv8
மஹாத்மா காந்தி நேரடியாக சுதந்திர போராட்ட களத்தில் இறங்கி போராடி அடிமை பட்டு கிடந்த மக்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். அவர் ஒன்றும் அடுத்தவனை உசுப்பேத்தி அடிவாங்க விட்டு அதில் குளிர்காய வில்லை. அதனால் தான் அவர் மஹாத்மா.
எங்களுக்கு குளிர்சாதன அறையில் உந்கார்ந்து கொண்டு ட்விட்டர், வாட்சப் போன்றவற்றில் இருந்து ஆதரவு வேண்டாம். நேரில் போராட்ட காலத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தால் தான் அது உண்மையான ஆதரவு. சும்மா சினிமா மாதிரி ராட்டை மாட்டை என்று பன்ச் டயலாக் எல்லாம் விட்டால் இளைய சமுதாயத்தில் இருந்து சாட்டை அடி தான் விழும். திரை உலகில் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்கள் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், விவேக், விஜய் சேதுபதி, மயிலசாமி போன்றவர்கள் தான். அதிலும் ராகவா லாரன்ஸ் ஒரு படி மேலே போயி போராளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். அந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அதை விட்டு விட்டு சும்மா வீட்டினுள் உந்கார்த்து கொண்டு கடந்த டிசம்பர் 2015 மழை வெள்ளத்தில் பொது ஜன்னல் வெளியேயே எட்டி பார்த்து துயரப்படும் மக்களை பார்த்து எள்ளி நகையாடியது போதும். எங்களுக்கு சினிமாக்காரன் யாருடைய ஆதரவும் நேரில் தான் வேண்டும். அதை விட்டு விட்டு சும்மா சீன் போடுவதை எல்லாம் உன் சினிமாவோடு வைத்து கொள். போராட்டத்தில் கலந்து கொள்ளாத சினிமா நடிகர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்