குடும்ப மானத்தை கெடுத்த கவுதம் கார்த்திக்!

திரு இயக்கத்தில் ‘சந்திரமௌலி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கவுதம் கார்த்திக். ஆச்சர்யம் என்னவென்றால், அவரது அப்பாவும் முன்னாள் டாப் ஹீரோக்களில் ஒருவருமான கார்த்திக்கும் இப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாரும், இப்போதும் கார்த்திக்கின் முகத்தையோ, நினைவையோ ரிப்பீட் செய்தால் பேஸ்தடித்துப் போவார்கள். ஏனென்றால் அவர் படப்பிடிப்புக்கு வராமல் கொடுத்த டார்ச்சர்தான் டினோசரின் மூக்கு போல முன்னால் வந்து முட்டும். அந்த கால சிம்பு என்று எல்லாராலும் வர்ணிக்கப்பட்டவரின் மகனான கவுதம் கார்த்திக் ஷுட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்து கொள்கிறார்? அப்பாவின் ஜீன் அப்படியே மகனிடமும் இருக்கும் அல்லவா?

ஆனால் அந்த நம்பிக்கையில் ஒரு வாளி சுடு தண்ணீரை பீய்ச்சி அடிப்பார் போலிருக்கிறது மகன். ‘சந்திரமௌலி’ படத்திற்காக தொடர்ச்சியாக 18 மணி நேரம் நடித்துக் கொடுத்திருக்கிறார் இவர். இந்த வியத்தகு மாற்றத்தை பொறுக்க முடியாமல் சந்திரமௌலி படக்குழுவே தள்ளாடிக் கிடப்பதாக இன்டஸ்ட்ரியில் பேச்சு!

இப்படி குடும்ப மானத்தை கெடுத்தா எப்படி கவுதம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வருகிற சட்டமன்ற தேர்தலில் அஜீத் அரசியலுக்கு வருவார்! போட்டுத் தாக்கும் சாமியார்!

Close