விதவிதமா கண்டுபிடிச்சு விதவிதமா சாகுறானுங்க! அடி தூள் பண்ணிய ரெஜினா!
இந்த மாதிரி ஆளுங்களுக்கு எங்கிருந்துதான் ஐடியா பிறக்குமோ? ஊரிலிருக்கிற எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வைத்து அலைய விடுவதில் அப்படியொரு பிரியம். ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் தரும் அபாயத்தை உணராதவர்கள்… அதில் ஈடுபட்டு சாவதுதான் அநியாயம். ‘ப்ளு வேல்’ என்றொரு கேம் வந்தது. டீன் ஏஜ் இளைஞர்களும் இளைஞிகளும் குழியில் விழுகிறோம் என்பதே புரியாமல் விழுந்து வைத்தார்கள். எப்படியோ? ப்ளுவேல் கோஷ்டியின் கொடூரத்திலிருந்து மீண்டது நாடு.
கத்தி போய் கடப்பாரை வந்த கதையாக இப்போது ‘கிகி சேலஞ்ச்’ என்றொரு விளையாட்டு வந்துவிட்டது. கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து கீழே இறங்கி ‘தையா தக்கா’ என்று ஆட வேண்டும். ஆட்டத்தில் கவனம் இருக்கும். ரோட்டில் யார் வருகிறார்கள். குறுக்கே என்ன இருக்கிறது என்றெல்லாம் தெரியாது. மோதி விழுந்தவர்கள் பலர். முடியாமல் விழுந்தவர்கள் பலர். சிலருக்கு கை கால் முறிவு என்று நையப்புடைத்து வைக்கிறது இந்த கேம். வைரஸ் வேகத்தில் பரவி வரும் இந்த விளையாட்டை உடனே நிறுத்தித் தொலைத்தால் என்ன என்று யோசித்தால்? போங்கய்யா நீங்களும் உங்க எண்ணமும் என்று நம்ம ஊர் நடிகைகளே நடுரோட்டில் இறங்கி தையத்தக்கா போடுகிறார்கள்.
லேட்டஸ்ட்டாக நடிகை ரெஜினா அப்படியே காரை விட்டு இறங்கி கச்சக்கா முச்சக்கா என்று ஆடிவிட்டு, பின் அதே சேஃப்டி மூடோடு காருக்குள் ஏறிவிடும் வீடியோ வெளியாகியிருக்கிறது. கிகி சேலஞ்ச் என்று யூ ட்யூபில் தேடினால் வந்து விழும் அபாயங்களுக்கு மத்தியில் தன் அபாய சிரிப்பை தவழ விட்டபடி அவர் ஆடும் ஆட்டமும், தென்னகத்தின் அழகு நிரம்பிய காஸ்ட்யூமான பாவாடை தாவணியில் காணப்படுவதும் ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது.
காரு வச்சுருக்கிறவன் ஜோரு காட்றான். நமக்கு ரெண்டு வீல்தான் இருக்கு என்று முகம் கவிழும் முட்டை கோஸ்கள், தப்பிச்சோம்டா சாமீய்னு நினைக்கிற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்தாலொழிய இந்த கேம் குறித்த அச்சம் வரப்போவதில்லை.
ஈஸ்வரா….!