இவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம?
“விவசாயிக்கு ஒண்ணுன்னா என் ஹீமோ குளோபின் ஹீட்டாயிடும். ஹார்மோன் நரம்பு கட் ஆயிடும்” என்று உதடு துடிக்க, தொண்டை புடைக்கச் சொல்கிற நடிகர்களையெல்லாம், “ஓரமா போயி விளையாடு தம்பி” என்று அதே விவசாயிகள் எச்சரிக்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று. சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவர்கள் பண்ணுகிற கூத்தை ரசிக்க முடியாமல்தான் அப்படி கோபப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து காவேரி நீர் வேண்டி கெஞ்சினார் கமல்.
“உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த சொல்லாமல் இதென்னய்யா புதுக்கூத்து?” என்று கமல்ஹாசனை கண்டித்தார்கள் விவசாய சங்கத்தினர். அவர் பண்ணிய காமெடி அப்படி என்றால், மைக் கிடைத்தால் போதும். விவசாயிகளுக்காக உருகி உருகி வேடிக்கை காட்டி வருகிறார் விஷால். ‘துப்பறிவாளன்’ படக் கலெக்ஷனில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று அவர் அறிவித்து இத்தனை நாளாச்சு. இன்னும் பத்து பைசா கூட ஒரு விவசாயிக்கும் போகவில்லை.
எந்த விவசாயியும் “எனக்கு டிக்கெட் பணத்துல ஒரு ரூபாய் ஷேர் கொடு” என்று கேட்கவும் இல்லை. அப்படியிருக்க… எதற்கு இந்த வீண் வாக்குறுதி? தமிழ்நாட்டு விவசாயிகளிடம் தப்பான வாக்குறுதி கொடுத்தது போதாது என்று ஆந்திரா பக்கம் போய் அங்கேயும் அதே பார்சலை பிரித்திருக்கிறார் விஷால்.
‘இரும்புத்திரை’ படம் தமிழில் பெரிய ஹிட். அதை ‘அபிமன்யு’ என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிட்டார்கள். தமிழை விட இருமடங்கு ஹிட். சண்டக்கோழி படத்திற்குப் பின் விஷாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறது அபிமன்யு. இந்த சந்தோஷத்தை கொண்டாட, ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டாடியிருக்கிறார் விஷால்.
அப்போது கொடுத்த வாக்குறுதிதான் இது. ‘அபிமன்யு’ படத்தின் டிக்கெட் விற்பனை ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று கூறி கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.
ஐயோ பாவம்… தமிழ்நாட்டு விவசாயி ஒருவருக்கும் தெலுங்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால், நம்பாதே நம்பாதே… என்று முதல் குரல் கொடுத்திருப்பார்கள்.
Katharu nalla katharu.
Suresh kamatchi movie promote pannu, inga vanthu katharurathukku
ni vijai ajith sombu thukki. daa