லாரன்சுக்கு ஒரிஜனலாக விழுந்த அடி? கழுத்துக் காலர் ட்ரிட்மென்ட் பின்னணி
“அவ்வளவு வலியிலும் போராட்டத்தில் கலந்துகிட்டாருப்பா…” என்று மாணவர்களும் இளைஞர்களும் நிஜ ஹீரோவாக்கிவிட்டார்கள் லாரன்ஸ்சை. இன்னும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, “அண்ணா வா… அரியணை ஏற வா…” என்றெல்லாம் வாட்ஸ் ஆப்பில் பொங்குகிறார்கள். “தமிழ்நாட்டின் தலைமை பொறுப்புக்கு உன்னை விட்டால் ஆள் இல்லை” என்றெல்லாம் முழங்கும் லாரன்ஸ் ரசிகர்களால், கடும் எரிச்சலுக்கு உள்ளாகி இருக்கிறது அரசியல் களம்.
பல கிலோ எடையுள்ள தர்பூசணிகள் கூட, கடைசியில் எலுமிச்சம் பழ சைசுக்கு சின்னதாகிவிடுவதுதான் ஒரிஜனல் பாலிடிக்ஸ் என்பதை போக போக புரிய வைக்கும் அரசியல் களம். அது போகட்டும்… இப்படி கழுத்தில் காலரோடு வந்து போகிறார் அல்லவா? அதன் பின்னணி என்ன?
லாரன்ஸ் நடிப்பில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் ‘சிவலிங்கா’ படப்பிடிப்பில் ஒரு பிரச்சனை. பைட் சீன் ஒன்றில் ஹீரோயின் ரித்திகா சிங் இவரை உதைப்பது போல காட்சியாம். அவரோ நிஜ பைட்டர். இந்தியாவுக்காக தங்கம் வென்ற பெண். லாரன்ஸ் கழுத்தில் லேசாக காலால் தட்டுவது போல காட்சி. அவரும் லேசாகதான் தட்டி வைத்தாராம். ஆனால் அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது லாரன்சுக்கு.
இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்காக ரித்திகாசிங் பல முறை மன்னிப்பு கேட்டாலும், அந்த மன்னிப்பா வந்து வலியை பொறுத்துக் கொள்ளப் போகிறது?
https://youtu.be/_Y8ksXOOqsk