டைரக்டர் அப்படி சொன்னப்போ பயம்மா இருந்திச்சு! மருளும் மகிமா!
‘ஈரம்’ அறிவழகன் படங்களை அலசி பிழிந்து காயப் போடுகிற விமர்சகர்களும் சரி, ரசிகர்களும் சரி, கடைசியாக அவரை ‘காரம்’ அறிவழகன் என்று வியக்காமல் போனதில்லை. தன் முதல் படத்திலிருந்து இப்போது இயக்கி வரும் ‘குற்றம் 23’ வரைக்கும், மக்கள் பிரச்சனையை அலசுகிற விஷயத்தில் படு ஸ்பீடாக இருக்கிறார் அவர். (சும்மாவா… ஷங்கர் அசிஸ்டென்ட்டாச்சே?) இந்த K23 மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் வரிசை படம்.
இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் அருண் விஜய். இவருக்கு ஜோடி மகிமா நம்பியார். இவரும் போலீஸ் ஆகவே நடித்திருக்கிறார் என்பதுதான் பூனை தன் மீசையை திருகிவிட்ட மாதிரியான ‘டெரர்’ தகவல்.
முதல் நாள் ஷுட்டிங்குக்கு வந்த மகிமாவுக்கு செம ஷாக். மேக்கப் இல்லாம அப்படியே வந்துரும்மா என்று கூறிவிட்டாராம் அறிவழகன். ஐயய்யோ மேக்கப் இல்லன்னா எப்படி என்று அஞ்சி அஞ்சி நடித்தவருக்கு சில தினங்களுக்கு முன்புதான் உயிரே வந்திருக்கிறது. யெஸ்… படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார் மகிமா. (நேர்ல கூடதான்) “எல்லா புகழும் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கருக்கே” என்று சந்தோஷத்தில் துள்ளுகிறார் மகி.
ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? ‘என்னை அறிந்தால்’ படம் பார்த்த நாளிலிருந்தே அருண் விஜய்யின் தீவிர ரசிகையாகிவிட்டார் மகி. ஆனால் அதே பர்சனாலிடியுடன் ஜோடியாக நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு வரும் என்று அவரே நினைக்கவில்லையாம்.
இன்னும் கூட நாலைஞ்சு படங்களில் ஜோடி சேர ஆசை என்று போகிற போக்கில் போட்டுவிட்டு போனார். (குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடாதேம்மா!)
https://www.youtube.com/watch?v=4NkzK7X9XKQ