அஜீத்தாவது… ரஜினியாவது? அறத்தை நிலைநாட்டிய ஊடகங்கள்!

“நிஜமான ஹீரோக்கள் அவங்கதான்…” என்று மாணவர்கள் பக்கம் கைகாட்டுகிறது இந்தியா. வீட்டுக்கொரு பிள்ளையை அனுப்பி “வென்று வா…” என்று அனுப்பி வைக்கிறது குடும்பம். இப்படி கூட்டம் கூட்டமாக ஏற்பட்ட எழுச்சி, அரசியல் மாநாட்டையெல்லாம் சின்ன கூட்டமாக ஆக்கிய கதை, தமிழகத்தின் வரலாறு! கிள்ளிய வலியை ரெண்டு நாள் கழித்தே அனுபவித்தது நடிகர் சங்கம். குறிப்பாக அஜீத் மாதிரி நடிகர்கள் வேறு வழியில்லாமல் வந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இன்று நடிகர் சங்க உண்ணாவிரத பந்தலில் தலை காண்பித்தார்கள். (அஜீத்தை வரவழைக்க நடிகர் சங்கம் பட்ட பாடு தனி செய்தியாக விரைவில்…)

நடிகர் சங்கம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த நேரத்திலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது தமிழகத்தில். மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலை இது. மீடியாக்கள் எல்லாம் இதைதான் லைவ்வாக கவர் செய்யும் என்றெல்லாம் யூகங்கள் பறந்தன. நாசருக்கும் விஷாலுக்கும் இந்த தகவல் பரிமாறப்பட, “மீடியாக்கள் யாரும் வர வேண்டாம். நாங்கள் பேசப் போவதில்லை” என்றார் அவர். (ஆனால் அவர்களே வீடியோ எடுத்து அதை மீடியாவிற்கு அனுப்பி போடச் சொன்னது எந்த விதத்தில் சேர்த்தியோ? அது அவர்களுக்கே வெளிச்சம்) நாசர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், நாங்கள் காண்பிக்க வேண்டியது உங்களை அல்ல. மாணவர்களைதான் என்று காலையிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்தைதான் லைவ் செய்கின்றன மீடியாக்கள்.

ரஜினி வந்தாலென்ன? அஜீத் வந்தாலென்ன? அதெல்லாம் அப்புறம்… என்ற முடிவை எடுத்து டி.ஆர்.பி ரேட்டிங்கையெல்லாம் பற்றி யோசிக்காத டி.வி சேனல்களுக்கு இந்த நேரத்தில் சுட சுட நன்றி சொல்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.

இதே நடுநிலை தொடரட்டும் நண்பர்களே…

https://youtu.be/4HLQu1PfB2U

4 Comments
  1. cujoo says

    If they come, why did they come and if they don’t show up they are against tamils .. Funny state.

  2. Raj says

    யோவ் அந்தணா…நேத்து நாசர் கொடுத்த அறிக்கை, பேட்டிலாம் பாக்கலையா நீ? போய் பாத்துட்டு வந்து அப்புறம் வந்து உன் செய்திய போடு.. அவரே தொலைக்காட்சி வேணாம்னு டீசண்டா சொல்லிடாரே. அப்புறம்ம ஏன் கூவுற நீ.. அரவேக்காடு மண்டையா….!

  3. Nadigan says

    narayaana andhana. oru nadigan ean vanthannu oru naal news, ippo vanthalum atha vimarsanam panni (indirectly) oru news. hhhhkkkkkk thooo – (nandri captain 🙂 pesamaa vera vealai seiyyalam

    ippadi potta ajith rasigannu potruviyee

  4. Jallikattu says

    ‘தல’ யோட அம்மா கோல்கட்டா ‘சிந்தி’ அப்பா
    ‘பாலக்காடு’, மனைவி ‘மலையாளி’, உடன் பிறப்புகள் அனைவரும், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், பிறந்தது ‘ஹைதராபாத்’, தமிழ் எழுத தெரியாது, பேச கற்றுக்கொண்டது மாடலிங் வந்த பிறகு.

    அந்த ‘தல’ க்கி தளபதி எவ்வளவோ பரவாயில்லை. ‘Demonstisation’ க்கு எதிரா குரல் கொடுத்தார், இப்ப மெரினா வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் இல்லை! விஷாலை அறிவிக்க சொல்லி நெருக்கடி!

Close