அசிங்கப்படுத்திய கட்சி நாளிதழ்! அமைதிகாக்கும் நடிகர் சங்கம்!
“யாரையும் விமர்சிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன்” என்று கூறிய கமல்ஹாசனுக்கே நாக்கில் மிளகாய் வறுக்கிற அளவுக்கு வெறுப்பேற்றி வருகிறது தமிழக அரசியல். “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று அவர் சொல்லப் போக, கோட்சேவுக்கும் காங்கிரசுக்கும், காந்திக்கும் கூட சம்பந்தமில்லாத அதிமுக பொங்கி வருவதுதான் வேடிக்கை.
“கமலின் நாக்கை இழுத்து வச்சு அறுக்கணும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொதித்திருக்கிறார். இன்னொருபக்கம் தமிழக பா.ஜ.க பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. சற்றே எல்லை மீறி இறங்கி அடித்த அதிமுக வின் கட்சி ஏடான ‘நமது அம்மா’ மீதுதான் இப்போது கடும் எரிச்சல் கமல் ரசிகர்களுக்கு.
கமல் தன் மகள் ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் கொடுக்கிற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழே அருவெறுக்கிற அளவுக்கு ஒரு கருத்தையும் எழுதியிருக்கிறது. இதற்கு கமலின் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சங்கம் அமைதியாக இருப்பதுதான் ஆச்சர்யம்.
இத்தனைக்கும் கமலின் பெரு முயற்சியால் வெற்றி பெற்ற அணி இது. விஷாலோ, நாசரோ, பொன் வண்ணனோ இது குறித்து ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லையே, ஏன்? என்று கவலையோடு நோக்குகிறது மக்கள் மனசு.
விஷால் எல்லாரையும் பயன்படுத்திகிட்டு கழட்டி விட்டுடுவார் என்று சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்.
அது உண்மைதான் போலிருக்கு!
[…] அசிங்கப்படுத்திய கட்சி நாளிதழ்! அமைத… 2019-05-16 […]
thani manitha olukkam illaadha indha dhrokikku idhuvum vendum, innamum vendum