78 நாட்டு மாடுகளின் பெயர்! விடாமல் முழங்கிய சமுத்திரக்கனி!
சினிமாவை டி.வி.டி களில் தேடுகிற கோடம்பாக்கத்தில், “கதைங்கிற அந்த வஸ்து டி.வி.யில் இல்லடா… உன்னை சுற்றி நடக்கிற சம்பவங்களிலும் வாழ்க்கையிலும் இருக்கு” என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்கிற ஒன்றிரண்டு இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். அவருக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிற ‘நல்ல மனுஷன்’ இமேஜை, மக்களை திருத்துவதற்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
‘அப்பா’ படத்தின் தாறுமாறான வெற்றிக்குப்பின், அவர் இயக்குகிற மிக முக்கியமான படம் ‘தொண்டன்’. இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார் சமுத்திரக்கனி. இந்தப்படம் குறித்து கனி சொல்லும் கருத்தென்ன?
“கரூர்ல ஒரு கல்லூரியில் நடந்த சம்பவம் என்னை உலுக்கிடுச்சு. கிளாஸ் ரூம்ல நுழைஞ்ச ஒரு மாணவன், அங்கிருந்த மாணவியை நாற்காலி கட்டையால் அடித்தே கொன்றான். பிரச்சனை ஒன் சைட் லவ்தான். அந்த கிளாஸ் ரூம்ல சுமார் 40 பேர் இருந்தும் எல்லாரும் கதறுனாங்களே தவிர, அவனை அடிச்சு விரட்ட நினைக்கல. அப்படி செஞ்சிருந்தா என்னாகியிருக்கும்னு நினைச்சேன். அதுதான் இந்த தொண்டன். ஆம்புலன்ஸ் டிரைவர் கேரக்டர்ல நடிக்கறதால, அது எங்கெல்லாம் போகுதோ, அது குறித்தும் பேசறதுக்கான வாய்ப்பு அமைஞ்சது”.
“அப்படியே ஜல்லிக்கட்டு விஷயத்தையும் டச் பண்ணியிருக்கேன். ஒரு சீன்ல 78 நாட்டு மாடுகளோட பேர்களை வரிசையா சொல்லியிருக்கேன். இதை ஒரே டேக்ல எடுத்தோம். இத்தனை இனம் இருந்திச்சா என்று கேட்கிறவர்களுக்கு ஆச்சர்யம் வரும்” என்றார் சமுத்திரக்கனி.
நாடோடிகள் மாதிரி பத்து மடங்கு ஸ்பீட் இருக்குற படம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்! அப்ப சினிமாவில் ஒரு ஜல்லிக்கட்டுன்னு சொல்லுங்க!
https://www.youtube.com/watch?v=U4b2jK5yrQQ