விக்கி நயன கோபி நைனார்! இந்தக் கதையை கேட்டீங்களா?
அடுத்தவங்க குடைன்னா படக்குன்னு மடக்கலாம். சொந்தக் காசுல வாங்குன குடையாச்சே? மடக்கறதும் தெரியக்கூடாது. விரிக்கறதும் தெரியக்கூடாது. இப்படியொரு கொள்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டு ‘சுயநல சூயிங்கம்’ ஆகியிருக்கிறார் நயன்தாரா.
இவரே தனது மேனேஜர் பெயரில் தயாரிக்கும் படம்தான் ‘அறம்’ என்கிறது இன்டஸ்ட்ரி. அர்னால்டே வந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ ரீமேக்கில் நடித்தாலும், அதில் நயன்தாரா ஜோடியாக இருந்தால், ‘சே… போங்க’ என்று கூறிவிட்டு ஒரு புரமோஷனுக்கும் வந்திருக்க மாட்டார். ஆனால், அறம் நிலைமையே வேறு.
புரமோஷன் விஷயத்தை விடுங்கள். கோபி நைனார் இயக்கிய இப்படத்தை, தனது உயிர் காதலர் விக்னேஷ் சிவனுக்குப் போட்டுக் காட்டினாராம். இண்டு இடுக்கு விடாமல் கவனித்து கவனித்து பார்த்த விக்கி, “படத்துல அப்படியொன்றும் விசேஷமில்லை. நிறைய ரீ ஷுட் பண்ணணும்” என்று கூறிவிட்டாராம்.
அதற்கப்புறம் ராப்பகல் பாராமல் எல்லாருமாக டிஸ்கஷன் நடத்தி, அறம் படத்தில் சில பகுதிகளை நறுக்கி கடாசிவிட்டு, ஷுட்டிங் எடுக்க மீண்டும் கிளம்பவிருக்கிறார்கள்.
கட்ட கடைசியில் படத்தின் இயக்குனர் பெயராக ‘விக்கி நயன கோபி நைனார்’ என்று டைட்டிலில் போட்டாலும் ஆச்சர்யமில்லை.
ஏனென்றால் இது சிங்கிள் தயாரிப்பு. கூட்டுக் கதை!
https://www.youtube.com/watch?v=Irkq3UerQPY