அஜீத் விஜய் படங்கள் வேண்டாம்! புதிய முடிவில் நயன்தாரா?
கேரள மாந்திரீகத்தையெல்லாம் ஒரு டம்பளரில் வடித்தெடுத்து ஒரே மூச்சில் குடித்திருப்பார் போல! நயன்தாராவுக்கு இத்தனை வயசான பிறகும், ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சம்பளம் படத்திற்கு படம் தாறுமாறாக உயர்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம், ஏதோ ஒரு வசிய மந்திரம் என்றெல்லாம் கோடம்பாக்கம் ஒரு முடிவுக்கு வந்தாலும், தானுண்டு, தன் அலட்டல் உண்டு என்று தனிக்காட்டு ராணியாக வலம் வருகிறார் நயன்தாரா.
நெடுஞ்சாலை ஆரி, ஜெய்யெல்லாம் கூட, நயன் நயன் என்று பப்ளிக்காக பேட்டி கொடுக்கிற அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கும் நயனுக்கு, உள்ளுக்குள் “இவிங்க தேவலாம் அவிய்ங்களுக்கு” என்ற எண்ணம் வந்திருக்கிறதாம். படப்பிடிப்புக்கு போனால், ஹீரோக்களே பரபரப்பாகி ஓடி வருவதை இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது அனுபவித்துவிட்டாரல்லவா? அந்த மரியாதையும் வணக்கமும் தொடர வேண்டும் என்றால், இவர்களை போல சிறுவர்கள்தான் (?) லாயக்கு என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் தெரிகிறது. இதுவே விஜய் அஜீத் படங்கள் என்றால், பரபரப்பும் மரியாதையும் அவர்களை சுற்றியே இருக்கும். கூப்பிட்ட குரலுக்கு இருந்த இடத்திலிருந்தே “ஏன்?” கேட்பதற்கும், ஓடோடி வந்து பணிவதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறதல்லவா?
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இனி அஜீத் விஜய் படங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் அவர். இவர்களுக்கே இப்படி என்றால், ரஜினி கமல்?
“ம்ஹும் போதும்” என்பதுதான் அவரது எண்ணமாம். இந்த விஷயம் காற்றுவாக்கில் காதில் விழுந்ததால் விமல் விஷ்ணுவெல்லாம் கூட, “நயன் கால்ஷீட் கிடைக்குமா பாருங்களேன்” என்கிறார்களாம்.
கட்டு கட்டா கரும்பை விளைய வச்ச விதியே, அதை கண்ணுக்கே தெரியாத எறும்புக்கு போடுறீயே? அடுக்குமா அடுக்குமா?