சீனையா கட் பண்றே? பீட்டாவுக்கு செக் வைக்க கிளம்பிய பாண்டிராஜ்!

பீட்டா என்று உச்சரிக்கும் போதே கடைவாய் பல் ரெண்டை கடித்துத் துப்பி விடுவார் போலிருக்கிறது பசங்க பாண்டிராஜ். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் அவர் பட்ட கோபம், அவுன்ஸ் கணக்கல்ல. டன் கணக்கு! பள்ளத்துல விழுந்த ஆட்டுக்குட்டிய தூக்குறேன்னு என் சொந்தக்கார பொண்ணு ஒண்ணு செத்து ஒரு வாரம்தான் ஆச்சு. காலையில் தூக்கலாம்னு சொன்னப்பவும், அது அழறதை பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுன்னு தன் உயிரை விட்டுட்டா. எங்களுக்காடா வந்து விலங்குகள் பற்றி பாடம் எடுக்குறீங்க? என்று பாண்டிராஜ் கேட்டதில் தவறே இல்லை.

பீட்டாவின் ஆட்டத்தைதான் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பார்த்தோமே?

கட்… விஷயத்துக்கு வருவோம். பாண்டிராஜ் தயாரிப்பில் மெரீனா புரட்சி என்ற படம் தயாராகி ரிலீசுக்கு ரெடியாகி நிற்கிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் வைத்திருந்த பாண்டி, இந்தப்படத்தின் ரிலீசுக்கு முன் மெரீனா புரட்சி வந்தால் பீட்டா அமைப்பு டென்ஷன் ஆகும் என்று அப்படத்தை தள்ளிப் போட்டிருந்தார். ஏன்? அதில் வரும் கன்டென்ட் அப்படியாம். பீட்டா அமைப்பை போட்டு தாக்கு தாக்கென தாக்கியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். பாண்டிராஜும் இவரும் சேரன் படங்களில் ஒன்றாக பணியாற்றியிருக்கிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் அந்த ரேக்ளா ரேஸ் வரவே கூடாது என்று டார்ச்சர் செய்த பீட்டா, எப்படியோ ஐந்து நிமிஷ காட்சியை நீக்கிவிட்டுதான் ஓய்ந்தது. இப்படியிருக்க…விடுவாரா பாண்டி?

மெரீனா புரட்சியை அவுத்து விடுங்கடா என்று ஆர்டர் போட்டிருக்கிறாராம். படம் சென்சாருக்குப் போகும்போதே சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

கலகம் இல்லாத உலகம் ஏது? வாங்க சார்… வச்சு செய்வோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Seemaraja | Vaaren Vaaren Seemaraja Lyrical

https://www.youtube.com/watch?v=faL9hCAfQrQ&feature=youtu.be

Close