தொகுதிக்கு போன கருணாஸ்! சுற்றி சுற்றி விரட்டிய பொதுமக்கள்!
அதிமுக ஒன்று, அதிமுக ரெண்டு, அதிமுக3 என்று குட்டிப் போட்டுக் கொண்டே போகிறது அவ்வளவு பெரிய கட்சி. இதில் யார் ஒன்று? யார் இரண்டு? யார் அவுட்? என்பதையெல்லாம் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் கிடைத்த மெத்தையில் நிம்மதியாக உருள முடிகிறதா என்றால் அந்த கொடுப்பினைதான் இல்லை ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு. மக்கள் மனநிலை ஒன்றாகவும் எம்.எல்.ஏக்களின் மனநிலை வேறாகவும் இருப்பதால், செல்லுமிடமெல்லாம் சேதாரம் ஆகி வருகிறார்கள் சசிகலா சப்போர்ட் எம்.எல்.ஏக்கள்.
அதிலும் கருணாஸ் பாடு செம திண்டாட்டம். படத்தில்தான் அவர் நகைச்சுவை நடிகர். நிஜத்தில் ரொம்பவே சீரியஸ் ஆன ஆள் என்பதை அவரது ‘பொங்குமாங்கடல்’ முகமே நிரூபித்து வருகிறது. “தொகுதியில எனக்கு ஆதரவா ஓட்டுபோட்டது எழுபதாயிரம் பேர்தான். ஆனால் எதிர்ப்பு ஓட்டுன்னு கூட்டிப்பார்த்தால் ஒரு ஒரு லட்சத்திற்கும் மேல். அவங்களுக்கெல்லாம் என்னால பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது. என்னை கேள்வி கேட்க யாருக்கும் தகுதியில்லை. உரிமையில்லை” என்றெல்லாம் பேசி வைக்க… வா மச்சான் வா… என்று காத்திருந்தார்கள் தொகுதி மக்கள்.
நேற்று தனது சொந்த தொகுதியான திருவாடனைக்கு சென்ற கருணாசுக்கு செல்லுமிடமெல்லாம் செம ஷாக் கொடுத்தார்கள் பொதுமக்களும் அதிமுகவின் ஓ.பி.எஸ் மற்றும் தீபா ஆதரவாளர்களும். வராதே வராதே திரும்பிப் போ என்று கூச்சல் எழுப்பியதுடன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப் போனவரையும் மாலை போட விடாமல் விரட்டி அடித்தார்கள்.
எப்படியோ? எதிர்ப்பை மீறி தொகுதிக்குள் நடமாடி வருகிறார் அவர். முழுசா அனுப்பி வைங்கப்பா…
https://youtu.be/xoaoR6BKeiM