இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்!
தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போன காலத்திலும் கூட, விவசாயத்தில் புதுப் புது யுக்திகளை கையாண்டவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இயற்கை உரங்கள் மீதும், ரசாயனமில்லா பயிர்கள் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த நம்மாழ்வார் வழியில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஐதரபாத்தில் அவருக்கு சொந்தமான மிகப்பெரிய விவசாய நிலத்தில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வயலில் இறங்கி ஏர் ஓட்டி, சேற்றில் புரள்வதில் அவருக்கு இருக்கிற ஆனந்தம், அவரோடு பழகியர்கள் சொல்லிக் கேட்க வேண்டிய பெரும் சந்தோஷம்.
ஐதராபாத்தை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சிக்கு அருகிலும் அப்படியொரு விவசாயப் பண்ணையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் அவர். இதற்காக திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தள்ளி சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கும் பிரகாஷ்ராஜ், விரைவில் அங்கு விவசாயத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறார்.
நம்மாழ்வாரின் பெயரில் இந்த பண்ணையை திறக்க முடிவு செய்திருக்கிறாராம் அவர்.
To listen audio click below :-