பிரேம்ஜி ஒரு நாய்! அதுக்காக இப்படியா யோசிக்கணும்?
இப்படியொரு தலைப்பை பார்த்தவுடன் என்னவோ ஏதோ என்று மனசுக்குள் ஒரு சம்மட்டி சப்தம் கேட்டால், அதற்கு நாம் பொறுப்பல்ல! அவருக்கு அப்படியொரு வேஷம் கொடுத்த அரவிந்த் ஸ்ரீதர்தான் பொறுப்பு.
அரவிந்த் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘சிம்பா’ படத்தில், பிரேம்ஜி ஒரு நாயாக நடிக்கிறார். “அடேய்… என் இமேஜ் என்னாவறது?” என்று கதை கேட்ட மாத்திரத்தில் உதை கொடுக்காமல், ஆஹா ஓஹோ என்று நடிக்க ஒப்புக் கொண்ட பிரேம்ஜிக்கு நாய் கழகத்தின் சார்பிலும், நாயை ஆளாக்கிய தாய் கழகத்தின் சார்பிலும் ஒரு நன்றியறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை. ஆனாலும் கதையும் பிரேம்ஜியும் அவருக்கான கேரக்டரும் அப்படியொரு சுவாரஸ்யம்.
ஹீரோ பரத்திற்கு பிரேம்ஜியை பார்க்கும் போதெல்லாம் அவரது கண்களுக்கு இவர் நாயாக தெரிவாராம். அதற்காக பிரேம்ஜிக்கு ஒரு நாய் கெட்டப் போட்டு நடிக்க வைத்துவிட்டார்கள். ஒரு நாய் பொம்மை உடம்புக்குள் புகுந்து கொண்டு நடிப்பதை கூட பொறுத்துக் கொள்ளலாம். இரண்டு நாய் கூட்டத்திற்கு நடுவில் ஒற்றை ஆம்பளையாக அவர் சிக்கிக்கொண்டு தவிப்பதையும் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக இருபது நாய்கள் வரவழைக்கப்பட்டு, அதன் குரைச்சலுக்கு நடுவில் இவரை நிற்க வைத்துவிட்டார்கள். நல்லவேளை… எந்த நாயும் பிரேம்ஜியை விழுந்து பிடுங்கவில்லை.
இந்த படம் வந்தபின் யார் பாராட்டுகிறார்களோ, இல்லையோ? கண்டிப்பாக த்ரிஷா பாராட்டுவார். தயாரா இருங்க பிரேம்ஜி!
https://youtu.be/15Cd3hYy_LY