நெருங்கும் காலா ரிலீஸ்! சீமான் தம்பிகளுக்கு வலை!!

காலா ரிலீஸ் தினத்தன்று எத்தனை தியேட்டர்களில் பட்டாசு வெடிக்குமோ, அல்லது பாட்டில்கள் தெறிக்குமோ? என்று திகிலாகிக் கிடக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இருந்தாலும், வசூல் ஆசை யாரை விட்டது? கனத்த மனசுடனும் கையளவு தைரியத்துடனும் படத்தை வெளியிட சம்மதித்திருக்கிறார்கள்.

இந்த திகில் எதனால் வந்தது? ரஜினியின் தூத்துக்குடி கலவர பேச்சு மட்டுமல்ல. படத்தில் வரும் மெயின் வில்லன், கிட்டதட்ட சீமானை நினைவுபடுத்துகிறாராம். சும்மாவே வெந்நீரில் விழுந்த நூடுல்ஸ் போல கொதிப்பார்கள் தொண்டர்கள். இந்த லட்சணத்தில் சீமான் கேவலப்படுவதை எந்த தொண்டன் சகிப்பான்?

நல்லவேளை… அரசின் பரிபூரண ஆசி ரஜினிக்கு இருக்கிறது. அதுவும் “எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்ய சொல்லக்கூடாது” என்று ரஜினி ஓப்பனாக பேசிய பின் சும்மாயிருப்பார்களா? வெண்ணையை தொன்னையோடு முழுங்க தயாராகிவிட்டார்கள். ரஜினிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்கிற முடிவுக்கு வந்துவிட்டது எடப்பாடி அரசு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியாவில் சூட்டிகலாக இருக்கும் சீமான் தொண்டர்களை “தூக்குங்க” என்று உத்தரவு போயிருக்கிறதாம். போலீசின் தேடுதலுக்கு அஞ்சி நிறைய பேர் தலைமறைவாகியிருக்கிறார்கள்.

பொழுதுபோக்கிற்காக தயாராகும் படங்கள் யார் உசிரையும் போக்கிவிடக் கூடாது. அது ரொம்ப முக்கியம்!

Read previous post:
காவேரிக்காகதான் போனாரா கமல்?

Close