‘ஊறுகாய் பாட்டிலை உப்பு கூட மதிக்க மாட்டேங்குதே’ மொமென்ட் இது. தயாரிப்பாளர் சங்கம் இந்த ஸ்டிரைக்கை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சினிமாவிலிருக்கும் மேலும் பல அழுக்குகளை துவைத்து எடுத்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது. க்யூப் மட்டும் பிரச்சனையில்லை. சினிமாவுக்குள் நகர்கிற எல்லாமும்தான் என்று நினைக்கிற விஷால் தலைமையிலான அமைப்பு அதற்கான வேலைகளை தினமும் முன்னெடுத்து வருகிறது.
தியேட்டர்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிற நேரம் போக, இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், என்று தினந்தோறும் ஒரு சங்கத்துடன் சந்திப்பு நடக்கிறது. இயக்குனர்கள் சங்க கூட்டத்திற்கு தமிழின் முன்னணி இயக்குனர்கள் கூடினார்கள். (ஷங்கர் மட்டும் மிஸ்சிங்)
ஒளிப்பதிவாளர்கள் மீட்டிங்குக்கு பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட முன்னணி கேமிராமேன்கள் வந்துவிட்டார்கள்.
நேற்று நடிகர்களுடன்…
ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜீவா, விஜய் சேதுபதி, விமல் உள்ளிட்ட ஒருவரும் வரவில்லை. விஷாலுடன் எப்போதும் பயணிக்கும் சூர்யா, கார்த்தி தவிர ஒரு முன்னணி நடிகர்கள் கூட அங்கு வரவில்லை. வேறுவழி? உதயா, ரமணா என்று தன் வீட்டு சொம்பு, டம்ளரை கொண்டே மியூசிக் வாசித்து முடித்துவிட்டார் விஷால்.
இந்த ஒற்றுமையை வைத்துக் கொண்டு வானத்துக்கு பச்சை பெயின்ட் அடிக்கலாம். பூமிக்கு நீலக்கலர் அடிக்கலாம் என்று கனவு காணும் விஷால்தான் ஐயோ பாவம்.
இன்னும் 100 வருஷம் ஆனாலும் தமிழ்சினிமா உருப்படாது!