நயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பாளர்கள் முடிவு!

நடு நரம்பை அறுத்து சுடு தண்ணீரில் போடுகிற வேலையை செய்வதில் எட்டப்பர்கள் சமர்த்தர்கள். தமிழ்சினிமாவிலும் அப்படிப்பட்டவர்கள் கிளம்புகிற நேரம் இது. இந்த வேலை நிறுத்தம் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் சீர் படுத்தும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அனைவரும். ஒற்றுமையை குலைப்பது போல ஒரு சிலர், சங்கத்தையும் ஸ்டிரைக்கையும் மீறி படத்தை வெளியிட்டால் என்ன என்று குறுக்கு புத்தியை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தியேட்டர்காரர்களும், ஸ்டிரைக்கை மீறி படம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதாக ஆசை காட்டி வருகிறார்கள். முதல் அரிவாள் பார்ட்டியான க்யூப் நிறுவனமும், தன் பங்குக்கு இலவச சேவை வழங்கி, இந்த வேலை நிறுத்தத்தின் உறுதியை உடைக்கிற முயற்சியில் இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் அப்படியொரு செய்தி.

நயன்தாரா, மம்முட்டி நடித்து மலையாளத்தில் வெளிவந்த ‘புதிய நியமம்’ என்ற படத்தை தமிழில் ‘வாசுகி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். மார்ச் 29 ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. மதுரையில் மட்டும் சுமார் ஏழு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

அது டப்பிங் படமோ, நேரடி படமோ? தியேட்டர்கள் நிரம்பினால், இப்போது வைக்கப்படும் கோரிக்கைகளும் ஸ்டிரைக்கும் அடிபடுமே? அதனால் தயாரிப்பாளர்களில் பலர் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். வாசுகி படத்தின் வெளியீடு உறுதியாகும் பட்சத்தில், நேரடியாக நயன்தாராவின் வீட்டுக்கே போய் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்கு முன் இப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவருக்கு தகவலும் சொல்லப்பட்டுள்ளதாம். நயன்தாரா இப்படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ இல்லை. அப்படியிருக்க… அவர் வீட்டை முற்றுகையிடுவது எப்படி சரியாகும்?

காலா படத்தின் தயாரிப்பாளர் ரஜினி இல்லைதான். ஆனால் காலாவை தள்ளி வைக்க வேண்டும் என்று ரஜினியிடம்தானே கேட்கிறோம். அப்படிதான் இதுவும் என்று பதில் வருகிறது.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தா, அதுவும் சரிதான்னு தோணுதே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியுடன் விஷால் சந்திப்பு! ஸ்டிரைக் என்ன ஆகும்?

https://www.youtube.com/watch?v=fHrNUWNh_cw&t=54s

Close