கவர்னர் ஆகிறார் ரஜினி!? என்னமா உசுப்பேத்துறாங்க…?
சூரியன் மாதிரி ரஜினி ஒரே இடத்தில்தான் நிற்கிறார். சுற்றி வருகிற கோள்கள்தான் சூடு கிளப்பி வருகின்றன. காவிரி பிரச்சனை, விக்னேஷ் தற்கொலை, ராம்குமாரின் மர்ம மரணம் என்று தமிழ்நாடே மூச்சு முட்டிக்கிடக்கிற நேரத்தில்தான், சைட்ல ஒரு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது கோடம்பாக்கம். ரஜினி பேமிலி பற்றி, வாரம் ஒரு நியூஸ் வர வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
போன வாரம் ஐஸ்வர்யாவுக்கு ஐ.நா மன்றத்தின் பெண்கள் நல்லெண்ண தூதர் பதவி கிடைத்தாக நியூஸ். அடுத்த வாரத்திலேயே அவரது தங்கையும் ரஜினியின் இரண்டாவது மகளுமான சவுந்தர்யாவுக்கு பிராணிகள் நல வாரியத்தின் தூதர் பதவி கிடைத்தது. (நடுவில் விவகாரத்து நியூஸ் புழுதி கிளப்பியது தனி) இப்படி அவரது குடும்பத்தை நோக்கி தானாக தேடி வரும் பதவிகள் ஒவ்வொன்றுக்குப் பின்பும், இந்தியாவில் பிரதமர் மோடி இருப்பதாக ஒரு பேச்சும் இருக்கிறது.
இது போதாதா? ரஜினி ரஞ்சித் படத்தை நடித்து முடித்ததும் அவரை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக்காமல் ஓய மாட்டார் மோடி என்பதாக கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் முக்கியமான சினிமா கம்பெனிகளில் மிக மிக சீரியஸ் ஆக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்த விஷயம்.
அவர் குடும்பத்தில் இன்னும் பாக்கி இருப்பது லதா ரஜினிகாந்த் மட்டும்தான். அவருக்கு எந்த பதவியை ஒதுக்கி வச்சுருக்காங்களோ?
To listen the audio click below :-