சபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு! ரஜினி உதவியை நாடிய கமல்?

சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நிஜம் தன்னை மறந்து எப்போதாவது வெடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களின் சந்திப்புகள் கூட, சமயங்களில் வரலாற்று சிறப்பு மிக்க குழப்பத்தை உருவாக்கும். அப்படிதான் கமல் ரஜினி சந்திப்பு நடந்திருக்கிறது.

கமலின் உடல் நலம் பற்றி பேசதான் ரஜினி போனார் என்பதாக பல்வேறு மட்டங்களில் சமாளிக்கப்பட்டு வந்தாலும், நிஜம் அதுவல்ல என்கிறது ரகசிய தகவல்கள். பின் எதற்காக இந்த சந்திப்பு? மறுபடியும் கவுதமியில் இருந்துதான் இந்த பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது. கமலை விட்டுப் பிரிந்த கவுதமி, சும்மாயில்லாமல் பிரதமர் மோடியை சந்தித்தார் அல்லவா? அந்த சந்திப்பு அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். ஏற்கனவே பிஜேபி யில் பொறுப்பில் இருந்தவர்தான் கவுதமி. ஆனால், அந்த காலம் வேறு. இப்போது பிரதமரை சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று அவருக்கு ஈசியாக உணர்த்தியது சுற்று புற சூழல்கள்.

சட்டென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழியாக பிரதமரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கினாராம் கவுதமி. அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டாலும், மிக முக்கியமான பதவி ஒன்றை தனக்கு ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டாராம் அவர். இந்திய அளவில் மிக செல்வாக்கான பதவியாக அது இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது சோர்ஸ். இந்த பதவி அவருக்கு வந்துவிடாமல் தடுப்பதற்காகதான் ரஜினியை வரவழைத்து சந்தித்தாராம் கமல்.

எந்த சந்திரபாபு நாயுடு, சபாஷ் நாயுடுவுக்கு எதிராக வேலை பார்த்தாரோ… அதே சந்திரபாபு நாயுடு ரஜினி சொன்னார் கேட்பாரல்லவா?

“ஏன் கமல் சொன்னாலும் கூடதான் கேட்பார்” என்கிறவர்கள், ‘அப்புறம் ஏன் கவுதமிக்கு ஆதரவா இருந்தாராம்?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டால், கணக்கு டேலி ஆகிவிடும்.

ஹ்ம்… பெரிய இடத்து ஜல்லிக்கட்டு. கொம்புக்கு பதிலா கோடாலி முளைக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம்!

https://youtu.be/XymFu0EfR_w

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தன்ஷிகா படப் பாடல்! துபாயில் வெளியீடு!

கபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு...

Close