வைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிய ரஜினியின் அரசியல்! நம்பிட்டோம் தலைவா!
“நீங்கள்லாம் சும்மாயிருந்தாலே நாங்க நல்லாயிருப்பம்யா… கையெடுத்து கும்பிடுறோம். கம்னு கிடங்க” என்று இலங்கையிலிருக்கும் தமிழர்கள் கதறி அழுது வருவதை இங்கிருக்கும் அரசியல் வாதிகள் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை. இலங்கைக்கு போகாதே என்று சினிமாக்காரர்களிடம் மட்டும் வீரம் காட்டும் இவர்கள், சென்னை டூ இலங்கை விமானப் போக்குவரத்தை நிறுத்தச் சொல்லி முழங்குவார்களா? அல்லது இங்கிருந்து தினந்தோறும் இலங்கைக்கு சென்று வரும் பிசினஸ் தமிழர்களை போகாதே என்று தடுப்பார்களா?
‘அரசியல் பண்ணுவதற்கு ஒரு ஆளு சிக்குனார்டோய்” என்று குதூகலித்த சில அரசியல்வாதிகள், யாழ்பாணத்திற்கு கிளம்பவிருந்த ரஜினியை “போகாதீங்க போகாதீங்க” என்று கேட்டுக் கொண்டதால் பயணம் கட்!
வவுனியாவில் 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினி பங்கேற்க இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கப்புறமும் முறைத்துக் கொண்டு கிளம்ப ரஜினி என்ன இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் கோபத்தை அறியாதவரா? ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிட்டார். இந்த முறை போகல. ஆனால் அடுத்தமுறை நான் போகணும்னு நினைக்கும் போது தடுக்காதீங்க என்று அவர் கூறியிருக்கிறார். மனுஷன் எந்தளவுக்கு வேதனைப்பட்டால் இப்படியொரு வார்த்தை வரும்?
ஆமாம்… ரஜினி ஏன் இந்த முறை இலங்கைக்கு போக நினைச்சாராம்? அதை அவரே சொல்கிறார். கேளுங்க.
தனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர். தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன். அத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி.
சுபாஷ்கரண்தான் தன்னை அழைத்துப் போய் இதையெல்லாம் காட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களாக ரஜினி காத்திருந்தது போல தெரிகிறது. இல்லையென்றால் இவருக்கு இலங்கைக்கு போகவும் தெரியாது. அப்படியே நாலு பேரிடம் வழி கேட்டுப் போனாலும் அங்கு இவரை வராதே என்று தடுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும் போலிருக்கிறது.
அரசியலில் வைகோ, திருமாவையெல்லாம் மிஞ்சிடுவார் போலிருக்கே ரஜினி?
https://www.youtube.com/watch?v=jSdGOfkXSqE&feature=youtu.be
In any Rajini related news, we see lot of stomach burning from u. Anyway least bothered, and all know u write for money.
தலைவா பொறுத்தது போதும்.. அவர்களாவது நிம்மதியா இருக்கட்டும்.. எந்திரன் பட விளம்பரத்துக்காக மூடிக்கினு இரு
you shutup your mouth & ****
தலைவர் ரஜினி அவர்கள் கண்டிப்பாக ஈழம் செல்ல வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இங்குள்ள சில அரசியல் வியாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக இலங்கை பிரச்சனை தீராமல் பார்த்து கொள்கின்றனர். ரஜினி இலங்கைக்கு செல்வதை தடுத்தவர்களே தமிழ் இன துரோகிகள். தமிழக மக்கள் அவர்களை அடையாளம் கண்டு வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
ரஜினி என்பவர் நடிகர் மட்டும் இல்லை….. தமிழக நலம் விரும்பியும் கூட…MLA , MP கூட இல்லாத பவர்….ரஜினிக்கு உண்டு.. எப்படி என்றால், அரசியல் சாயம் இல்லாத தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்..அதனால் இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை பற்றி சொன்னால், அதை பற்றி கண்டிப்பாக பரிசீலித்திருப்பார்….
ரஜினியும் அதை செய்ய தானே இலங்கை செல்ல இருந்தார் ,
நல்ல விசயத்தை யாரும் இனிமேல் கெடுக்காதீர் ,
இங்கிருந்து கொண்டு என் தமிழர்கள் அங்கு கஷ்டப்படுகிறார்கள் நீலி கண்ணீர்
யாரும் நடிக்காதீர், அங்கு போய் உண்மை நிலவரத்தை பார்த்து
அந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள் .