குடும்ப நிகழ்ச்சி! அப்செட் ஆன ரஜினி?

உயிரைக் கொடுத்து உழைப்பதே பிள்ளைகளின் நலனுக்காகதானே? குடிசையாக இருக்கட்டும்… பளிங்கு மாளிகையாக இருக்கட்டும்… எல்லாவற்றுக்கும் பொதுவான பாசக் கணக்கு இது. கண்ணுக்குத் தெரியாத இந்த பாச வலைதான் எல்லாரையும் இறுக்கிப் பிடித்துக் கட்டி வைக்கிறது.

நல்லது. விஷயத்துக்கு வருவோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளுக்கு டைவர்ஸ் ஆன பின்பு சற்றே அப்செட்டில் இருந்தார் ரஜினி. பொது விழாக்களில் தன் இரண்டாவது மகள் பற்றி அக்கறையோடு பேசுகிற அளவுக்கு போனது சவுந்தர்யா குறித்த அவரது கவலை. சினிமாவிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, சற்றே தள்ளாட்டம் கொண்டிருந்தவரை பற்றி ஒரு பொறுப்பான அப்பா கவலைப்படாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

நல்லவேளையாக சவுந்தர்யா மனதில் ஒரு பூ பூத்தது. தொழிலதிபர் விசாகனுடன் காதல் வயப்பட்டு, அதை கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிருக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் வருகிற ஜனவரியில் டும் டும் டும்! கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்டார்கள் மணமகன் வீட்டினர். அதற்கப்புறம் பெண் வீட்டு முறை.

நேற்று, அதாவது ஞாயிற்றுக்கிழமை தன் குடும்பத்தினருடன் மணமகன் வீட்டுக்கு செல்வதாக ஏற்பாடு செய்திருந்தாராம் ரஜினி. ஆனால் அதிகாலை வந்த செய்தி, இந்த நிகழ்ச்சியையே ரத்து செய்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டது. ரஜினியின் நெருங்கிய நண்பரும் கன்னட படவுலகம் மற்றும் அரசியல் உலகத்தின் முக்கியஸ்தருமான அம்பரீஷ் காலமானார்.

அடித்துப்பிடித்துக் கொண்டு பெங்களூருக்கு ஓடினார் ரஜினி. ஆவலோடு பிளான் போட்டிருந்த குடும்ப நிகழ்ச்சி, இப்போது இன்னொரு நாளில் நடப்பதாக திட்டமாம்!

காதலிப்பவர்களுக்கு காத்திருத்தல்தான் சுகம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Viswasam – Official Motion Poster

https://www.youtube.com/watch?v=GqMdbpYi5Yw

Close