போலீசுக்கு ஆதரவு! போட்டுத் தாக்கிய சோஷியல் மீடியா!

அரசியலும் அன்ஃபிட் ரஜினியும்!

சீமானை லத்தி சார்ஜ் செய்ய வந்த இரண்டு போலீஸ் காரர்களை போட்டு புரட்டிவிட்டார்கள் நாம் தமிழர் இளைஞர்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடந்த பரபரப்பு நிகழ்வு இது.

தன் தலைவனை கண்ணெதிரே தாக்க வருவது யாராக இருந்தாலும் உணர்ச்சிவயப்படுவது தொண்டனின் நிலைதான். அதை உணராதவரல்ல ரஜினி. ஏனென்றால் ரஜினியை பார்க்கிற ரசிகர்கள், தலைவா…. என்று தொப்புள் கொடி செப்டிக் ஆகிற அளவுக்கு கதறுவதை அவரே பல முறை பார்த்து ரசித்திருப்பார். அப்படியிருக்க… இந்த பிரச்சனைக்குள் தன் கூரான மூக்கை ஏன் விட்டார் என்பதுதான் புரியாத புதிர்.

தமிழகத்தின் அவசர பிரச்சனைகள் எதற்கும் நாலு வாரம் கழித்து, ‘என்னவோ போ. என் கடமையை முடிச்சுட்டேன்’ என்பது போல கருத்து கூறிவரும் ரஜினி, இன்று அதிகாலை அலாரம் வைத்து எழுந்து போட்ட ட்விட் ஒன்றுதான் சோஷியல் மீடியாவின் சோயா பீன்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

‘வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’. -இதுதான் ரஜினியின் ட்விட்.

கர்பிணி பெண்ணை எட்டி உதைத்துக் கொன்ற டிராபிக் போலீஸ். கூலிக்கு வேலைக்கு போன தமிழனை கொத்து கொத்தாக கொன்ற ஆந்திரா போலீஸ். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசே தீ வைத்த கொடுமை. இதையெல்லாம் கேட்காத ரஜினி இப்ப மட்டும் ஏன் வாய் திறக்கிறார் என்று கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது சோஷியல் மீடியா.

இங்கொன்றும் அங்கொன்றுமாக ரஜினிக்கு ஆதரவான கருத்துக்கள் வந்தாலும், ரஜினி ரசிகர்களே முகம் சுருங்கிப் போன மொமென்ட் இது.

மக்களின் மனநிலை எல்லா காலத்திலும் போலீசுக்கு எதிராகவே இருப்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. அப்படியிருக்க… ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி இது புரியாமல் போனது. மக்களோடு ஒத்துப்போகாத யாருக்கும் தலைவனாகிற தகுதி இல்லை.

இன்று காலையிலிருந்து அந்த தகுதியை இழக்கிறார் ரஜினி.

பின்குறிப்பு- இத்துடன் கவிஞர் பழனிபாரதியின் முக நூல் கருத்தும் வண்ணப் பெட்டிக்குள்.

5 Comments
 1. Devaanandh says

  Kirukkuthanamaana padhivu. Makkalodu othhu pobavan thalaivan alla. Makalai neripaduthubavan than thalaivan. Police meedhu kai vaipadhu ini dhinamum nadakkum, pinvizhaivindri, endraal- naatai kaapaatra yaaraalum mudiyaadhu ini!

  1. கிரி says

   சரியா சொன்னீங்க பாஸ். மக்களை நெறிப்படுத்துவனே தலைவன்.

   இனி யாருமே காவல்துறை பக்கம் போக மாட்டாங்க போல 🙂 அவங்க தான் மோசம் ஆச்சே!

   அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு.

   அந்தணன் மேல கூடத்தான் தலைவரை பற்றி தப்பு தப்பா எழுதறாரேன்னு கடுப்பு இருக்கு.. இருந்தாலும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குல்ல அது மாதிரி 🙂

   இனி பாருங்க அவனவன் ஹீரோ ஆகி போலீசை அடிப்பான்.. வீடியோ எடுத்து போடுவான். அந்தணன் என்ன சொல்றாருன்னு பாப்ப்ப்போம் 🙂

 2. Raj says

  Not Valid points Anthanan sir

 3. தமிழ் பிரபாகரன் says

  உனக்கு நன்றாக தெரியும் என்பதால் தான் 50 ஆண்டு காலமாக காவேரி பிரச்சனையை தீர்க்காமல் இருக்கிறே போல இருக்கு . இனியும் தமிழ், தமிழன் என, தமிழக மக்களை ஏமாற்ற முடியாது டா . தமிழக மக்கள் எப்பவுமே வன்முறையை விரும்ப மாட்டார்கள். தமிழர்கள் அமைதி விரும்பிகள். ஆதலால் தான், உன்னை தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்து மகிழ்ந்தார்கள். தலைவர் ரஜினி அவர்களின் கருத்தை. அனைத்து தமிழக மக்களும் வரவேற்கிறார்கள்.

 4. கிரி says

  “இன்று காலையிலிருந்து அந்த தகுதியை இழக்கிறார் ரஜினி.”

  🙂 🙂 🙂 மொத வேலையா இதெல்லாம் செய்தால் தகுதி இழக்கபடுவார்கள் என்று அட்டவணையை அந்தணன் அவர்களை வெளியிட வேண்டுகிறோம்.

  அந்தணன் உங்க ரஜினி எதிர்ப்பு அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா 😀

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராணுவம் வந்தால்தான் எதிர்ப்போம்! போலீஸ் வந்தா வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டோம்!

Close