ஆசையாய் வந்த தயாரிப்பாளர்! அலறவிட்ட விஜய் சேதுபதி!
“பலாச்சுளையிலும் முள்ளு வச்சு தைச்சுட்டானே ஆண்டவன்” என்று அலறிக் கொண்டிருக்கிறார் அந்த இயக்குனர். ஒய்? எல்லாம் வெரிகுட் ஆசாமி விஜய் சேதுபதியின் அலட்டலால் வந்த வினை.
தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருக்கிற சாஃப்ட் ஆசாமி விஜய் சேதுபதிக்கு இப்படியொரு கொடுஞ் செயல் கொடுக்கு இருக்கிறதா? அடக்கடவுளே என்று அதிர்ச்சிக்கு ஆளாகாமல் இந்த செய்தியை படித்து முடிக்க முடியாது.
சில வாரங்களுக்கு முன் செல்வராகவனின் உதவி இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதியை சந்தித்தார். அவருடன் பண பலமுள்ள ஒரு தயாரிப்பாளரும் சென்றிருந்தார். கதையை கேட்ட விஜய்சேதுபதி, “தம்பி…கொஞ்சம் வெளியில் இருங்க” என்று கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் இப்படி சொன்னாராம்.
“இந்த பையனை டைரக்டரா வச்சு எடுக்கறதுக்கு பதில் எஸ்.பி.ஜனநாதனை வச்சு எடுங்க. உடனே கால்ஷீட் தர்றேன்!”
அவரும் மறு பேச்சு பேசாமல் ஜனநாதனை சந்தித்திருக்கிறார். “பட்ஜெட் 22 கோடி ஆகும்” என்றாராம் ஜனநாதன். பதறிக் கொண்டு மீண்டும் விஜய் சேதுபதியிடம் வந்தாராம் தயாரிப்பாளர். எனக்கு சம்பளம் ஏழு கோடி. ஐந்து கோடிய முதல்ல கொடுங்க என்று இங்கும் ஒரு குண்டை வீசியிருக்கிறார் விஜய் சேதுபதி.
அப்புறம்?
நெஞ்சு நிறைய கனவுகளோடு வந்த அந்த புது தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம். இரண்டு பேரையும் நழுவ விட்ட அந்த அறிமுக இயக்குனர்தான் அய்யோ குய்யோ என்கிறார்.
பலா தோலில் மட்டுமல்ல… உள்ளே இருக்கிற சுளையும் சமயத்தில் முள்ளாய் குத்தும்…. விஜய் சேதுபதி மாதிரி!