ஜப்பானில் ரெமோ! ரஜினி பட தியேட்டர்களில் முன்னேற்பாடு!
றெக்க கட்டி பறக்குதய்யா சிவகார்த்திகேயன் புல்லட்! எடுத்த எடுப்பிலேயே ஆக்சிலேட்டரை திருகி, அதிரடியாகப் பறந்த சிவகார்த்திகேயனுக்கு ரெமோ ரொம்ப ரொம்ப முக்கியமான படம்! வெறும் பொழுதுபோக்கை தாண்டி, வேறொரு ரிஸ்க்கும் எடுத்தார் ரொமோவில்! கமல் மாதிரியான கடோத்கஜன்கள் மட்டுமே செய்து வந்த வேலை அது. ஆளே பெண்ணாக மாறி பர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும். வீட்டில் மனைவியும் அம்மாவும், “நெசமாவே பெண் பிள்ளை மாதிரியிருக்கு” என்று வியந்த பின்புதான் படப்பிடிப்புக்கே கிளம்பினார்.
இதோ அடுத்த கட்டம்! வருகிற 7 ந் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸ். வெளிநாடுகளில் மட்டும் மறுநாள்தான்! திருட்டு விசிடியை ஒரு நாளாவது கட்டுப்படுத்தலாமே என்கிற முன்னெச்சரிக்கை! வழக்கமாக வேறெந்த முன்னணி தமிழ் படங்களுக்கும் இந்த முறை இருந்ததில்லை. அது போகட்டும்… முதன் முறையாக ஜப்பானில் சிவகார்த்திகேயன் படம் வெளியாகப் போகிறது. தமிழ் நடிகர்களில், ரஜினி, கமல், அஜீத், விஜய் தவிர வேறு எந்த தமிழ் நடிகர்களின் படங்களையும் நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதில்லையாம்.
இந்த முறை ‘மெட்ராஸ் மூவிஸ்’ சார்பாக கண்ணன் ரெமோவை வெளியிடுகிறார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்-
“வழக்கமா ரஜினி சார் படங்களைதான் யொகோயமா (Yokoyama) டோக்கியோ (Tokyo) நகோயா (Nagoya) ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட்டு வந்தார்கள். விஜய், அஜீத் படங்களை இதில் முதல் இரண்டு ஏரியாக்களில்தான் வெளியிடுகிற வழக்கம். இந்த முறை ரஜினி படங்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் ரெமோவையும் மூன்று ஏரியாக்களில் வெளியிடுகிறோம். தமிழ் பேசும் மக்கள் இப்பவே ஆர்வமாக காத்திருக்கிறார்கள்” என்றார்!
மோகனாவுக்கு ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஆர்டே….ர்!
To listen audio click below :-