ஆரம்பிச்சுட்டாய்ங்க… பணத்தை ரிட்டர்ன் பண்ணணுமாம்!
ஆரம்பத்தில் குதிரை ரேஸ் மைதானமாக இருந்தது ரஜினி பட வியாபாரம்! இப்போதெல்லாம் அந்த விஸ்தாரமான மைதானம் சுருங்கி சுணங்கி கோலிக்குண்டு மைதானமாகி வருவது பெரும் துயரம் அன்றி வேறென்ன? அடித்துப் பிடித்துக் கொண்டு ரஜினி படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்ட அதிசயம், காலாவில்தான் அரங்கேறியிருக்கிறது. எம்.ஜி. தர மாட்டோம் என்று கூறிய அவர்கள், படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் அடிப்படையில்தான் வாங்கியிருக்கிறார்கள்.
படம் தியேட்டருக்கு வந்து இரண்டாம் நாளே பஞ்சாயத்தை கூட்டிவிட்டார்கள் அதே வியாபாரிகள். முதலில் வாயை திறந்திருப்பது திருப்பூர் கோவை ஏரியா தியேட்டர்கார்கள். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்ல. ரஜினியின் கதை தேர்வும் சரியில்ல என்று இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்திருக்கும் அவர்கள், இப்படியே போனா யாரை நம்பி தொழில் நடத்துவது என்று கேட்பதுதான் கொடுமை.
புலம்பிய வாயை அலம்பக்கூட நேரமில்லாமல், தங்களுக்கு படத்தை கொடுத்த விநியோகஸ்தரை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அவரோ, தனுஷ் நல்லவருப்பா. பணம் வந்திரும். அச்சப்படாம இருங்க என்று ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு விட்டிருந்தால் கூட சந்தோஷமில்லை. “ஏன்ப்பா… துறுதுறுன்னு சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறீங்க? படம் பிக்கப் ஆகலாம். லேடீஸ் பேமிலினு ஜனங்க உள்ளே வரலாம். அதுக்குள்ள அவசரப்பட்டு பேசாதீங்க” என்றதுதான் சந்தோஷம்.
ஏன் அப்படி சொன்னார்? சில தியேட்டர்காரர்கள் ஊருக்கு முந்திக் கொண்டு படம் சரியில்ல என்று சேனல்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த வேண்டுகோள்!
கியாரே… நஷ்டவதானிகளா?
காலா படம் விடுமுறை நாளில் வரவில்லை என்றாலும் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் ஈட்டி வருகிறது. உலகெங்கிலும் முதல் நாளில் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாம். காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 22.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
இந்த படம் சென்னையில் மட்டும் 7.84 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் வந்த வசூலை சேர்த்து 140 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது.