கண் கலங்கிய ஐஸ்! கலாய்த்த சத்யராஜ்!
அரை டிராயர் மற்றும் ஆபாச கூத்துகளோடு முடிந்தது என் வேலை என்று சினிமாவை டீல் பண்ணும் பெரும்பாலான ஹீரோயின்களுக்கு மத்தியில், சிலை வைத்து போற்றப்பட வேண்டியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்த சில படங்கள் பாடாவதி என்றாலும், பல படங்கள் பிரமாத லிஸ்ட்டில் சேர்ந்தவைதான். குறிப்பாக காக்கா முட்டை, அண்மையில் வந்த கனா!
இதில் ‘கனா’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது. அங்குதான் இந்த கண்கலங்கலும் கலாய்ப்புகளும். ‘பத்து வயசிலேயே எங்கப்பா தவறிட்டாரு. எந்த கஷ்டமும் இல்லாம அம்மா வளர்த்தாங்க. ஒரு நாள் கூட எங்கப்பா இல்லையேன்னு நான் நினைச்சதில்ல. ஆனால் கனா படத்தில் சத்யராஜ் சார் கூட நடிக்கும் போது, நம்ம அப்பா இருந்திருந்தா இப்படி இருந்திருப்பாரோன்னு தோணுச்சு’ என்றார். (கண் கலங்குனதெல்லாம் ச்சும்மா தலைப்புக்காக)
பின்னாலேயே பேச வந்த சத்யராஜ், ‘சென்ட்டிமென்ட்ல உருகுற ஆள் நான் இல்ல. கொஞ்ச நாளா லைட் வெளிச்சம் பார்த்தா இடது கண்ல இருந்து தண்ணி வருது. அதுக்காக கூலிங் கிளாஸ் போட்டு மறைச்சுகிட்டு இருந்தேன். சமயங்களில் மேடைகளில் அந்த கூலிங் கிளாசை கழட்டி துடைக்கிறதை பார்த்துட்டு சத்யராஜ் கண் கலங்கினார்னு போட்டு விட்டுர்றாங்க. இங்க ஐஸ்வர்யா பேசுனதை கேட்டுட்டு நான் கண்கலங்குனதா யாரும் எழுதிடாதீங்க’ என்றார் நக்கலும் நையாண்டியுமாக!
ஹார்ட் வொர்க், கைதட்டல்களுக்குரிய வசனங்கள், சமாதானமில்லாத மேக்கிங் என்று மிரட்டப்பட்ட கனா படத்தின் சக்சஸ் மீட்டில், இப்படியெல்லாம் பேசி அந்த நிகழ்வின் கனத்தையே காலி பண்ணினார் சத்யராஜ்.
என்னவோப்பா மாதவா… இப்பல்லாம் புரட்சித்தமிழன் சிரிக்கறதுக்கும் சிரிக்க வைக்கறதுக்கும்ன்னே விழாவுக்கு வர்றாரு. அவர் போன பிறகும் சிரிப்பா சிரிக்குது ஏரியா. ஏன்?
இந்த நிகழ்ச்சியிலேயே அவர் சொன்ன ஒரு கருத்துக்காகதான். “நடிகர்கள் யாரும் இனி நாட்டை ஆள முடியாது. நல்லகண்ணு மட்டும் ஆளலாம்!”
‘ஹு இஸ் நல்லக்கண்ணு?’ என்று கேட்கிற காலத்தில் இருக்கோம். இவரு வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிகிட்டு!