பாகுபலி படத்துக்கே அவமானத்தை தேடித் தந்த சத்யராஜ்!
பாகுபலி படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது நம்ம சத்யராஜ்தான். படத்தில் நிகழும் திருப்பங்கள் யாவும், கட்டப்பா என்கிற கேரக்டரை சுற்றியே நடப்பதும், அந்த கேரக்டரை சத்யராஜ் அப்பழுக்கில்லாமல் சுமந்திருப்பதும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். (நடுவில் சிலர் ராஜவம்சத்தின் திமிர் தனத்தை ஒரு தலித்திடம் காட்டுவதா என்று பாகுபலிக்கு சாதி சாயம் பூச முயன்றதெல்லாம் அநியாயத்தின் உச்சம். அதே ராஜவம்சம்தான், ‘என் குழந்தையை முதலில் நீதான் ஏந்த வேண்டும். என் அப்பன் ஸ்தானம் உனக்கு’ என்று டயலாக் பேசுகிறது. இந்த காட்சியை வசதியாக மறந்துவிட்டது சாதி அரசியல். போகட்டும்… நாம் சொல்ல வருவது அதுவல்ல.)
கட்டப்பாவாகவே வாழ்ந்திருக்கும் சத்யராஜ், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டதால் தியேட்டர்களில் எழுகிற கூச்சலும், வலைதளங்களில் வருகிற விமர்சனங்களும் சத்யராஜின் பணத்தாசையை அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது.
பாகுபலி பார்த்த எவரும் இனி ரம்யா கிருஷ்ணனை பார்க்கிற போது, ‘ராஜமாதா’ என்று எழுந்து வணங்காமலிருக்க முடியாது. சத்யராஜை பார்க்கிற எவரும், ‘கட்டப்பா…’ என்று நேசிக்காமலிருக்க முடியாது. ஆனால் அவ்விரு கேரக்டர்களுக்கும் இழுக்கு தேடி தருகிற வகையில், ரம்யா கிருஷ்ணனின் கணவராக ஒரு விளம்பரப் படத்தில் தோன்றி, அதுவும் ராஜா ராணி உடையில் தோன்றி பாகுபலியின் தலையில் பாலிடாலை வார்த்திருக்கிறார் சத்யராஜ். இந்த தவறில் பாதி பங்கு ரம்யா கிருஷ்ணனுக்கும் உண்டு.
கொடுமை என்னவென்றால், பாகுபலி ஓடும் தியேட்டர்களில் இடைவேளையில் இந்த கருமத்தை ஒளிபரப்புகிறார்கள். பாப்கார்னோடு உள்ளே வரும் ரசிகன், “என்னய்யா… கட்டப்பாவுக்கும் ராஜமாதாவுக்கும் கள்ளக் காதலா?” என்று கமெண்ட் அடிக்க தியேட்டரே கொல்லென்று சிரிக்கிற அளவுக்கு நாராசமாக இருக்கிறது அந்த காட்சி.
இந்தியா சினிமாவின் வாழ்நாள் சாதனை படமான பாகுபலியில் என்ன மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறோம். அதில் ரம்யா கிருஷ்ணன் என்னவாக தோன்றியிருக்கிறார் என்பதெல்லாம் சத்யராஜ் என்கிற மகா கலைஞனுக்கு தெரியாமலிருந்திருக்காது. கேவலம் பணத்திற்காக இத்தகைய விளம்பரங்களில் நடித்து பாகுபலியின் பெயரை கெடுத்த சத்யராஜை, யார் மன்னித்தாலும், இந்த காவியத்திற்காக ரத்தம் சிந்திய ராஜமவுலி மன்னிக்கவே மாட்டார்.
https://youtu.be/02kPwTb-28s
Nee mattum enna kuraichala, kaasukkaaga vaalattum nayithane
அந்தணன், இது உங்களுக்கே நல்லா இருக்கா? இந்த அளவுக்கா உங்கள் இதயம் நாறிப்போயிருக்கிறது? மன்னிக்க வேண்டும், உங்களை வருத்தப்பட வைப்பதல்ல என் நோக்கம், ஆனா உங்களின் மடத்தனமான உளறலை சும்மா ஒதுக்கி விடவும் மனம் வர வில்லை.
ஏன் சார், பாகுபலி ஒரு படம் தானே, கட்டப்பாவும் ராஜ மாதாவும் கதாபாத்திரங்கள் தானே, அதில் நடித்தவர்கள் அப்படியேதான் இருக்கணுமா? இங்கே கேவலப்படுத்துவது அந்த நடிகரோ அல்லது நடிகையோ அல்ல, உங்களின் மோசமான கற்பனைதான். போங்க சார், உங்கள் மீதிருக்கும் மரியாதையை கெடுத்தக்கொள்ளாதீர்கள்.
i think you are not tamil guy. always you are criticizing satyaraj
Dai naayea nee yean over rajamouli ku sombu thookara. Elumbu thundukka
dei, bahubali is just movie, entertainment. What is disrespect to that. Stayaraj is correct, he is just a actor, he is not a producer or director of bahubali.
எப்ப கன்னடனிடம் மண்டியிட்டானோ அப்பவே இவன் ஒரு தமிழ் இன விரோதி ஆகிவிட்டான். தமிழ் சமூகம் இந்த புரட்டு தமிழனை மன்னிக்காது.