கருத்து சொல்லவும் ஒரு முகவெட்டு வேணும்ல? சீமானை வரவழைத்த டைரக்டர்!
‘நாட்டின் தூக்கம் கலையணும்னா நாக்கால கூட சொடக்கு போட்டு எழுப்புவேன்’ என்று அல்லும் பகலும், அனல் பிழம்பாக பேசி வருபவர் சீமான்! அவருக்கென ஒரு இமேஜ் வந்துவிட்டது தமிழ்நாட்டில். தேர்தலில் கணசமான ஓட்டுகளை வாங்கி, மக்கள் மனதிலும் நம்பிக்கையை பெற்று விட்டார் சீமான். இனிமேல் சினிமாவில் நடிக்க வந்தால், அவரது நிஜ வாழ்வின் நெருப்புக் கருத்துக்களோடு கேரக்டரும் இணைந்திருந்தால்தான் முடியும்.
தற்போது அவர் நடித்து வரும் ‘மிக மிக அவசரம்’ என்ற படம், அத்தகைய பேக்கேஜ் ஐட்டங்களை கொண்டதா எனத் தெரியவில்லை. ஆனால் நடிக்க சம்மதித்திருக்கிறார் சீமான். சினிமாவில் போராளிக்குரிய மிடுக்கும், கண்ணியத்துக்குரிய கவனமும் பெற்ற ஒரே நடிகராக சில முக்கிய படங்களை ஆக்ரமித்து வந்த சமுத்திரக்கனி, சீமானின் ரீ என்ட்ரிக்குப் பின் சற்றே பின் செல்லக் கூடும்.
சினிமாவை சற்று தள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியலில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த சீமான், மீண்டும் நடிக்க சம்மதித்தது ஏன்? அமைதிப்படை2, கங்காரு போன்ற படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சிதான் இப்படத்தின் இயக்குனர். இவர் சீமானின் செல்லத் தம்பிகளில் ஒருவர் என்பதால்தான் இது நிகழ்ந்ததாம்.
“ஹ்ம்… ஒரிஜனல் தமிழச்சிக்கெல்லாம் யார் வாய்ப்பு தர்றா? பாம்பேயிலேர்ந்து மினுக்கிகிட்டு வந்தா கொடுப்பாங்க” என்று முன்னணி ஹீரோக்களை பார்த்து முழங்கிய ப்ரியங்கா என்ற ஸ்ரீஜாதான் இப்படத்தின் நாயகி.
ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி துணிச்சலாக அலசவிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படம் வந்தால், ஸ்ரீஜாவுக்கும் ஒரு போராளி இமேஜ் வருமோ என்னவோ?
https://youtu.be/PVug7rtiL60
தேர்தலில் கணசமான ஓட்டுகளை வாங்கி, மக்கள் மனதிலும் நம்பிக்கையை பெற்று விட்டார் சீமான் ???????
சுரேஷ் காமாட்சி சீமான் தம்பியா? ஓ அது தானே பாத்தேன் விஷாலை ஏன் விமர்சிக்கிறார் என்று ???என்ன ஒரு விசுவாசம்