சிபிராஜ் ஐஸ்வர்யா ரொமான்ஸ்! இது கட்டப்பா புண்ணியம்!
கெமிஸ்ட்ரி வாத்தியார் கூட அந்த வார்த்தையை அத்தனை முறை உச்சரித்திருக்க மாட்டார். ஆனால் கோடம்பாக்க மேடைகளில் பல முறை உச்சரிக்கப்பட்ட வார்த்தைதான் இந்த ‘கெமிஸ்ட்ரி’! ஒரு ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் கட்டிப்பிடி மேட்டர்கள் கனக்கச்சிதமாக அமைந்தால் அதுதான் கெமிஸ்ட்ரி என்று ‘பதப்படுத்தி’ வைத்திருக்கிறது அவ்வுலகம்!
நேற்று கட்டப்பாவ காணோம் பட பிரஸ்மீட்டிலும் ஆறாக வழிந்து ஓடிய வார்த்தையாக இருந்தது கெமிஸ்ட்ரி. யெஸ்… படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும், சிபிராஜும் அதிகம் பேர் பொறாமையால் வெந்து சாகிற அளவுக்கு கெமிஸ்ட்ரி காட்டினார்கள். உருளல் புரளல் தாரளமாக இருந்ததால், அங்கு வந்திருந்த திரைப்பட மீடியேட்டர்கள் சிலரும் கூட, படத்திற்கு ப்ளஸ் சிக்னல் காட்டியபடி வழிந்ததை பார்க்க முடிந்தது.
எப்படிங்க இப்படி? அந்த புதிரை சிபியே அவிழ்த்தார். “கதைப்படியே நானும் ஐஸ்வர்யாவும் நெருக்கமா நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இதுக்கு முன்னாடி நான் அப்படியெல்லாம் நடிச்சதில்ல. கொஞ்சம் தயங்கியபடிதான் அவங்களை அப்ரோச் பண்ணினேன். அவங்கதான், அதுக்கெல்லாம் கூச்சப்படாதீங்க என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் என்ன? பூந்து விளையாடியாச்சு” என்றார்.
ஒரு வாஸ்த்து மீன் எங்கெல்லாம் டிராவல் ஆகிறது. அது போகிற இடங்களில் எல்லாம் என்ன நடக்கிறது? இதுதான் கதை என்றார் படத்தின் இயக்குனர் மணி செய்யோன். சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் ஹிட்டடித்த குற்றம் 23 பட இயக்குனர் ஈரம் அறிவழகனிடம் தொழில் கற்றுக் கொண்டவர் இவர்.
மீனுக்காக கூட்டம் வருதோ இல்லையோ? ட்ரெய்லர்ல ஐஸ்வர்யா சிபிராஜ் நெருக்கத்தை பார்க்குற ரசிகர்கள், எச்சில் வழிய தியேட்டருக்குள் என்ட்ரி கொடுப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!
https://youtu.be/rnECpEPTf2g