மண்டைக்கு மேல மலை முளைக்கும்! மனசுக்கு பக்கத்துல குயில் இசைக்கும்! சிம்புவும் திடீர் மாற்றங்களும்!
மண்டைக்கு மேல் மலையே முளைத்து ஆடினாலும், தொண்டைக்கு கீழே இருக்கிற மனசுதான் மனிதனுடைய ரிமோட் கண்ட்ரோல்! அது எந்த நேரத்தில் எந்த சேனலை தட்டுகிறதோ… அதுதான் அவனின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இந்த நல்ல தத்துவத்தை திடீரென உணர்ந்து ‘பரம சாது’வாகிவிட்டார் சிம்பு.
கடந்த சில மாதங்களாகவே அவர் பேசுகிற பேச்சும், செய்கிற செயலும் “அட…. நல்லாயிருக்கே” என்று ஆச்சர்யப்பட வைப்பதுதான் ஆச்சர்யம்! அப்படியொரு ‘அட நல்லாயிருக்கே’தான் இதுவும்.
விஷால் புகழ் சுரேஷ் காமாட்சிக்கு திடீர் அழைப்பு விடுத்தாராம் சிம்பு. “வரும்போது வெங்கட் பிரபுவையும் கூட்டிட்டு வந்திருங்க” என்று இவர் சொல்ல, வழக்கம் போல அரட்டை கச்சேரியாக இருக்கும் என்று போயிருக்கிறார் இவர். போன இடத்தில் “புடிங்க” என்று சிம்பு வழங்கியதுதான் ஆகச்சிறந்த பரிசு!
“நான் நடிக்கும் படத்தை நீங்களே தயாரிங்க. வெங்கட் பிரபு இயக்கட்டும்” என்று சிம்பு சொல்ல, இரட்டை சிறகிலும் எமஹா என்ஜினை பூட்டிக் கொண்டார் சுரேஷ் காமாட்சி. ஏன்? இன்றைய தேதிக்கு சிம்புவின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறது இரண்டு பெரிய நிறுவனங்கள். ஒன்று- வீரம் போன்ற படங்களை தயாரித்த விஜயா புரடக்ஷன்ஸ். இன்னொன்று லைக்கா. அந்த பட்டியலில் தன்னையும் சேர்த்தாரே சிம்பு என்கிற சந்தோஷம்தான்…
ஆச்சர்யம் என்னவென்றால், வெங்கட்பிரபுவிடம் முன்பே கதை கேட்டுவிட்டு படம் பண்ணலாம் என்ற முடிவையும் எடுத்தபின்புதான் இவரிடம் சஸ்பென்சாக சொல்லியிருக்கிறார் சிம்பு.
சிம்பு இந்த முடிவை எடுத்ததன் பின்னணி புரியாமல் சினிமாவுலகம் கிசுகிசுத்துக் கொண்டிருக்க… “பேசுறவன் பேசட்டும். பிளைட்டை ஸ்டார்ட் பண்றா” என்று நேற்றே ரன்வேயை கடந்துவிட்டார் சுரேஷ் காமாட்சி.
வெற்றிகளை குவிங்க கண்ணுங்களா…!
ha haa haa. Pavam suresh kamatchi